Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோட்டை கடக்க முயன்ற யானை மீது பேருந்து மோதி விபத்து! (படங்கள்)

ஒசூர்: ஒசூரை அடுத்த சூளகிரி அருகே நனர் கிரேடு பகுதியில், சாலையை கடக்க முயன்ற யானை மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், யானை படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகின்றது.

பெங்களூரு நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று, ஒசூரை அடுத்த சூளகிரியில், சாலையைக் கடக்க முயன்ற யானை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், யானை படுகாயம் அடைந்தது. இதையடுத்து நடக்க முடியாமல் அவதிப்பட்ட யானை, காயங்களுடன் ரோட்டிலேயே படுத்துக் கொண்டது.

இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், அங்கேயே யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், யானையை நேரில் பார்வையிட்டார். தற்போது, யானையை கிரேன் மூலம் துாக்கி, பேரண்டபள்ளியிலுள்ள வனஆராய்ச்சி அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி நடைபெற்று வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close