Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தே.மு.தி.கவே எங்களோடு வரப் போகிறது!' -கேப்டனுக்கு 'செக்' வைக்கும் ஜூலை 17

அண்மையில் தி.மு.கவில் இணைந்த மக்கள் தே.மு.தி.க நிர்வாகிகள், தற்போது  தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கின்றனர். 'சேலம் கோட்டை மைதானத்தில் நடக்க இருக்கும் பிரமாண்டக் கூட்டத்தில், தே.மு.தி.க தலைவர் தவிர, பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் தி.மு.கவில் இணைய இருக்கிறார்கள்' என்கிறார் சந்திரகுமார்.

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் தே.மு.தி.கவைத் தொடங்கினார் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட தே.மு.தி.கவின் முக்கிய நிர்வாகிகள். இவர்களுக்கு சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில்  மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்து முறைப்படி அவர்கள் தி.மு.கவில் இணைந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் சந்திரகுமார்.

தே.மு.தி.க தலைமையோடு தற்போது அதிருப்தியில் இருக்கும் அனைத்துத் தொண்டர்களையும் சந்தித்துப் பேசி வருகிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம், தே.மு.தி.கவின் நிர்வாகிகளும் சென்று தொண்டர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். ' சந்திரகுமார் பேச்சைக் கேட்டு யாரும் தி.மு.கவிற்குச் செல்ல வேண்டாம். கேப்டன் நல்ல முடிவை எடுக்கப் போகிறார். உள்ளாட்சித் தேர்தலில் நமது பலத்தை நிரூபிப்போம்' எனப் பேசி வருகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்களை வைத்து, இணைப்பு விழா நடத்தினால் கட்சிக்கு பலவீனமாகிப் போய்விடும் என்பதால், சமரச முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

சுற்றுப்பயணம் குறித்து சந்திரகுமாரிடம் பேசினோம். " தேர்தல் நேரத்தில் என்னிடம் பல மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பேசி வந்தனர். அவர்களையும் தே.மு.தி.க தொண்டர்களையும் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்றுப்பயணம் சென்று வருகிறேன். மண்டல வாரியாக சந்திப்பு நடந்து வருகிறது. ஈரோடு, சேலத்தில் பயணத்தை முடித்துவிட்டோம். தே.மு.தி.கவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் கோலோச்ச முடியாது என நினைக்கும் சிலர் மட்டும்தான், விஜயகாந்த் தலைமையை ஏற்று அங்கு இருப்பார்கள்.

ஏராளமான ஒன்றிய செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பெருவாரியான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். தொண்டர்கள் விஜயகாந்த் பக்கம் இல்லை என்பது தேர்தல் முடிவுகளில் இருந்தே தெரிந்துவிட்டது. தே.மு.தி.கவில் தற்போது இருக்கும் சில நிர்வாகிகளும், உள்ளாட்சித் தேர்தல் வரையில்தான் விஜயகாந்தோடு இருப்பார்கள். அதன்பின்னர் எங்கள் பக்கம் வருவார்கள். வருகிற 17-ம் தேதி சேலம், கோட்டை மைதானத்தில் மிகப் பிரமாண்டமான இணைப்பு விழாவை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். எவ்வளவு பேர் வருவார்கள் என்பதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்தைத் தவிர, அனைத்து தொண்டர்களும் தி.மு.க பக்கம் வருவார்கள்" என்றார் உற்சாகத்தோடு.

சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது குறித்து தொண்டர்களை சமாதானப்படுத்தி வரும் விஜயகாந்தால், அதிருப்தி அணி வீசும் அடுத்தடுத்த அஸ்திரங்களை செயலிழக்க வைக்க முடியவில்லை.

-ஆ.விஜயானந்த்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ