Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொது சிவில் சட்டம் முயற்சி குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு சமம்! -கருணாநிதி

சென்னை: பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத, சிக்கலான பிரச்னையைக் கையிலெடுக்க முயற்சிப்பது, குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும் என்று கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாகக் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழ் நாளேடுகளில் 2-7-2016 அன்று ஒரு செய்தி, பொது சிவில் சட்ட விவகாரத்தை சட்ட ஆணையத்தின் ஆய்வுக்காக மத்திய அரசு அனுப்பியுள்ளது என்பதே அந்தச் செய்தி. இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கவுடா எழுதியிருக்கும் கடிதத்தில், பொது சிவில் சட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

சதானந்த கவுடா, சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பொது சிவில் சட்டம் குறித்து ஒருமித்த கருத்து ஏற்படுத்து வதற்காக பல்வேறு தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது. இதை ஒருசில நாட்களில் செய்து முடிக்க முடியாது. சில காலம் ஆகலாம்” என்றும் தெரிவித்திருந்தார்.

முஸ்லீம் மதத்தில் விவாகரத்து செய்யும் “தலாக்” நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றம், அண்மையில் கருத்து தெரிவித்தபோது, தலாக் முறைக்கு அரசமைப்பு ரீதியில் முக்கியத்துவம் உள்ளதா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியது.
இதற்கிடையே நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறது. அனைவருக்கும் பொதுவான ஒரே சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது பாரதீய ஜனதா கட்சியின் விருப்பம். இதை கொண்டு வந்து நடைமுறைப் படுத்துவோம் என அந்தக் கட்சி, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளது.

பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும், நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையில் சொல்லப் போனால், இந்த விவகாரத்தில் சட்டக் கமிஷனின் பரிந்துரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல. பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும், நெடுங்காலப் பழக்க வழக்கங்களையும் ஒருங்கிணைத்து அனைவர்க்கும் பொதுவானதொரு சிவில் சட்டத்தை ஏற்படுத்து வது என்பதும் எளிதான காரியமல்ல.

நமது நாட்டில், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் ஆயிரம் இருக்கும்போது; பொருளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித்துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நாள்தோறும் பெருகி வரும்போது; பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத, சிக்கலான பிரச்னையைக் கையிலெடுக்க முயற்சிப்பது குளவிக் கூட்டிற்குள் கையை விடுவதற்கு ஒப்பானதாகும்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close