Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீட்டு மாடியில் இருந்து நாயை வீசிய நபரின் அடையாளம் தெரிந்தது

வீட்டு மாடியில் இருந்து நாயை வீசி கொல்வது போன்ற வீடியோ நேற்று இணைய தளங்களில் பரவியது. அந்த வீடியோவை பார்த்தவர்கள் மனம் பதை பதைத்தனர். வீடியோவில் ஒருவர், நாய் ஒன்றை கையில் பிடித்து வைத்திருக்கிறார். பின்னர்  அதனை அப்படியே இரு புறமும் பிடித்து தூக்கி,  கீழே வீசுகிறார்.

சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே அந்த நாய் விழுகிறது. நாயைக் வீசிய அந்த மனிதர், சிரித்துக் கொண்டே வீடியோவுக்கு போஸ் கொடுப்பது போல அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது  கடும் எதிர்ப்பை  சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தனர்.

இந்த வீடியோ, சென்னையில் இருந்துதான் அப்லோட் செய்யப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. நாயை  தூக்கி போடும்போது, அது ஸ்லோமோசனில்  போய் கீழே விழுகிறது. அதற்காக கூடுதல் effects சேர்த்திருப்பதும் வீடியோவில் தெரிய வந்தது.

இந்தக் கொடுர வீடியோ இணையங்களில் பரவியதையடுத்து,  நாயை வீசிய நபர் குறித்து துப்பு கொடுத்தால்  ஒரு லட்ச ரூபாய்  பரிசளிப்பதாக அளிப்பதாக 'ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல்' என்ற விலங்குகள் நல அமைப்பு அறிவித்தது.  இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனரிடம், விலங்குகள் நல ஆர்வலர் ஸ்வரன் கிருஷ்ணன் என்பவரும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யுமாறு புகார் அளித்துள்ளார்.

தற்போது நாயை வீசி எறிந்தவரின்  அடையாளம் தெரிந்துள்ளது. கவுதம் சுதர்சன் என்ற அந்த மாணவர், சென்னை மாதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்து வருகிறார் என்று தெரிய வந்துள்ளது. கவுதம் சுதர்சன், தனது வகுப்புத் தோழர் ஆஷிஷ் பாலுடன் சேர்ந்த இந்த காரியத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த வீடியோவை நேற்று முதல் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close