Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டை ஒழிக்க போராடும் 'பீட்டா' இப்போது எங்கே போனது?

ல்லிக்கட்டை ஒழித்துக் கட்டுவதன் பின்னணியிலுள்ள வெளிநாட்டு  அரசியலை, தோலுரிக்கும் வகையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது 'ஹிப் ஹாப் தமிழா'வின் 'டக்கரு, டக்கரு' வீடியோ ஆல்பம்.

சமூகக் காரணிகளை முன்வைத்து மேற்கத்திய பாணியில் இசை ஆல்பம் வெளியிடுவதில் புகழ்பெற்ற ஹிப்ஹாப் குழு, ஜல்லிக்கட்டு விஷயத்தை கையில் எடுத்து 'தமிழர்கள் மிகப் பெரிய பாரம்பரியம் கொண்டவர்கள். அதில் ஒன்று ஜல்லிக்கட்டு 'என்ற வகையில் இந்த ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டது. யூ டியூபில் லட்சக்கணக்கான தமிழர்களால் இந்த ஆல்பம் பார்க்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு அரசியலும் அதனை ஒழித்து விடுவதன்  பின்னணியில் உள்ள பன்னாட்டு அரசியல், பெரு நிறுவனங்களின் நோக்கங்களை  திரைப்பட பாணியில் சில நிமிட காட்சிகள் மூலம் விளக்கும் வகையில் அந்த பாடல் அமைந்திருக்கும். இதற்கிடையே ஜல்லிக்கட்டை முன்னெடுத்து எடுக்கப்பட்ட 'டக்கரு டக்கரு' ஆல்பத்துக்கு 'பீட்டா' அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது தமிழர்களிடையே  கடும்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இப்போது சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து நாய் ஒன்று கீழே வீசப்பட்ட வீடியோவை பார்த்து இந்தியாவே அலறுகிறது. திருநெல்வேலியை சேர்ந்த கௌதம் சுதர்சன் என்ற  மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் மாணவர், தனது நண்பர் ஆஷிஸ் பாலுடன் சேர்ந்து இந்தக் கொடூர செயலை வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

இவர்களைக் கைது செய்ய புளுகிராஸ் அமைப்பை சேர்ந்த ஸ்ரவன், ஜெனிஃபர், ஆன்டணி ஆகியோர் கடும் முயற்சி எடுத்தனர். இந்தக்  கொடூர செயலில் ஈடுபட்ட  மாணவர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது.' புளுகிராஸ்' அமைப்பும் இதனை உறுதி செய்துள்ளது. இந்த விவாரத்தில் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ய பொதுமக்கள்  உதவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விஷயத்தில்தான் இன்னொரு கேள்வியும் எழுகிறது. ஜல்லிக்கட்டை ஒழித்து விட வேண்டுமென்று அதற்கு எதிராகத் தொடர்ந்து வழக்குப் போட்டு,  நடக்க விடாமல் செய்யும் 'பீட்டா' அமைப்பு  நாய் வீசப்பட்ட துன்புறுத்தப்பட்ட  சம்பவத்தில் இதுவரை தலையிடவில்லை. இந்த சம்பவம் குறித்தும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.  'புளுகிராஸ்' அமைப்பை சேர்ந்தவர்கள்தான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேரில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்ல ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு 'பீட்டா 'அமைப்பு  தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறது. மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் முயற்சியில் 'பீட்டா' அமைப்பு ஈடுபட்டுள்ளது. அந்த மசோதா நிறைவேற்றம் குறித்து, 'பீட்டா 'அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் காளைகளை ஈடுபடுத்துவது, மாட்டு வண்டி பந்தயங்கள், விலங்குகளை மோத வைப்பது ஆகியவ விலங்குகளைத் துன்புறுத்தும் விஷயம் 'என்று தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு மட்டும்தான் பீட்டா அமைப்பின் கண்களுக்குத் தெரியுமா நாய் மொட்டை மாடியில் இருந்து வீசப்படுவது மிருகவதையாகத் தெரியவில்லையா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close