Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மெட்ரோ பணி: சென்னை அரசுப் பள்ளியில் பொங்கிய மணல்... அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்!

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், இன்று காலை மர்மமான முறையில் பெண்கள் கழிவறையில் இருந்து மணல் உருவாகி மலைபோல் தேங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் இயங்கிவருகிறது டாக்டர் அம்பேத்கர் அரசினர் மேல்நிலைப்பள்ளி.  இன்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் சில ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். அப்போது பெண்கள் கழிவறையின் அருகில், வெள்ளி நிறத்தில் சொதசொதவென மணல் போன்ற திரவம் வழிந்துகிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்றுபார்த்தபோது அது பெண்கள் கழிவறையிலிருந்து வெளியேறுவதை கண்டனர். கழிவறையிலிருந்து தொடர்ந்து மணல் வெளியேறியதைக்கண்டு உடனே தலைமை ஆசிரியருக்கும் எழும்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். அதற்குள் கழிவறையிலிருந்து வெளியேறிய மணல் மலைபோல பள்ளி வளாகத்தில் தேங்க ஆரம்பித்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதை எடுத்து வெளியே கொட்டினர்.



இந்நிலையில் தகவல் அறிந்து சிஎம்டிஏ அதிகாரிகள், காவல்துறையினர், மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சில மணிநேரங்களுக்கு பின்னரே மணல் உருவாவது நின்றது. கழிவறையிலிருந்து வெளியேறி,  சொதசொதவென இருந்த மணல் முதலில் திரவம் போல வடிந்து, பின்னரே மணல் போல காய்ந்து தேங்கியது.

பள்ளியை அடைத்தபடி தேங்கியுள்ள மணலை நீக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள்  ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் பள்ளி அருகே பரபரப்பு உருவானது.

பள்ளியின் அருகே மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் அதன் எதிரொலியாகவே இவ்வாறு மணல் உருவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அதிகாரிகள் மணல் உருவானதன் பின்னணி குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவருகின்றனர்.

- படங்கள் மற்றும் வீடியோ: ப.சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ