Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு! -இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடித்து இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 57 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 107 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர், பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும் ஒன்றும் நடக்கவில்லை.

இதனிடையே கடந்த 29-ம் தேதி தி.மு.க எம்.பி., திருச்சி சிவா தலைமையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர் சங்க தலைவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜை சந்தித்து மீன்வர்களையும் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தினர். இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், தமிழக மீனவர்கள் இடையூறு இன்றி மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் வகையில் மாற்று திட்டங்கள் ஏற்படுத்துவதுடன் பாரம்பரிய பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பாக இலங்கை மீனவர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் குத்தகை அடிப்படையில் மீன்பிடிப்பதற்காகன் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக இலங்கை அரசு தரப்பில் ஆலோசிககப்பட்டு வருகிறது. இதனிடையே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிககை எடுககுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் இலங்கை அரசுககு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இந்திய இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைககு உடனடியாக ஏற்பாடு செய்யுமாறும், இந்த பேச்சுவார்த்தைககு முன்னதாக நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிகக சென்ற 3 விசைப்படகுகளையும் அதில் இருந்த 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். சிறை பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் 16 பேரையும், இலங்கை காங்கேசன்துறையில் உள்ள கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.

ஒரு புறம் தமிழக மீனவர்களுககு ஏற்படும் பிரச்னைகளை களைய நடவடிககை மேற்கொண்டு வருவதாக செய்திகளை வெளியிட்டு வருகிறது இலங்கை அரசு. ஆனால் இலங்கை கடற்படையினரோ கடந்த 4 நாட்களில் மட்டும் 44 மீனவர்களையும் 6 விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப்படகினையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்ற மீனவர்களையும் படகுகளையும் விடுவிகக நடவடிககை எடுககுமாறு தமிழக முதல்வர் தொடர்ந்து பிரதமர் மோடிககு கடிதம் எழுதி வருகிறார். ஆனால் பிரதமர் மோடி இதில் நேரடி கவனம் செலுத்தாதால் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிககப்படாததுடன் மேலும், மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

- இரா.மோகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ