Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்! -:திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: பெண் பொறியாளர் சுவாதி படுகொலை வழக்கை தமிழக போலீசார் மேலும் விசாரிக்காமல், சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி காலை பென் பொரியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து திருமாவளவன் கூறும்போது, ''பெண் பொறியாளர் சுவாதி படுகொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இந்த கொலை வழக்கில், முகநூல் மூலம் சுவாதியோடு தொடர்பு கொண்ட வேறு சில நபர்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தை பலர் எழுப்புகிறார்கள்.

அதனால், இந்த ஐயங்களுக்கு விடை சொல்லும் வகையில் தமிழக அரசு, சுவாதி படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். தமிழக போலீசார் விசாரணையை தொடரக் கூடாது. மேலும், பாதிக்கப்பட்ட சுவாதியின் குடும்பத்திற்கு இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். அவரது சகோதரிக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்