Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடர்ந்து மனஇறுக்கம்..! ராம்குமாருக்கு சிறையில் கவுன்சலிங்


சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் யாரிடமும் பேசாமல் தொடர்ந்து மன இறுக்கத்தில் இருந்து வருவதால் அவருக்கு மருத்துவர்கள் கவுன்சலிங் கொடுத்து வருவதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்  சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமாரை போலீஸார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், அங்கு யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வருகிறார். அவரது அறையில் இரண்டு கைதிகளை சிறை நிர்வாகம் அடைத்துள்ளது. அவர்களிடமும் மனம் விட்டு ராம்குமார் பேசவில்லை.

இந்நிலையில் ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவரது உறவினரும், வழக்கறிஞருமான ராமராஜ் மட்டுமே சந்தித்து பேசியுள்ளார். ராம்குமாரின் பெற்றோர், சகோதரிகள் மற்றும் உறவினர்கள் அவரை சந்திக்கவில்லை. இந்த வருத்தம் ராம்குமாருக்கு அதிகளவில் இருக்கிறது. இதனால் அவர், மன இறுக்கத்தில் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமாருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் அவருக்கு சிறையில் உள்ள உளவியல் டாக்டர்கள் கவுன்சலிங்  கொடுத்துள்ளனர். ராம்குமாரின் மனநிலைக்கு ஏற்றவாறே டாக்டர்கள்பேசியுள்ளனர். மன அழுத்தத்தைக் குறைக்க சில தியான முறைகளையும் ராம்குமாருக்கு அவர்கள் சொல்லி கொடுத்துள்ளனர். பல கேள்விகளை கேட்ட டாக்டர்களுக்கு ஒற்றை வரியிலேயே ராம்குமார் பதிலளித்துள்ளார்.

சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே ராம்குமாருக்கும் கொடுக்கப்படுகிறது. அதை சாப்பிட்டு விட்டு சிறையிலேயே அமைதியாகவே இருக்கிறார் ராம்குமார். ஜூலை 11ம் தேதி ராம்குமாரை அவரது பெற்றோர் சந்திக்க ஏற்பாடுகளை வழக்கறிஞர்கள் குழு செய்து வருகிறது.அப்போது ராம்குமார், பெற்றோரிடம் அல்லது வழக்கறிஞர்களிடம் கூடுதல் தகவல் சொல்லலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுவாதியின் நெருங்கிய நண்பர் முகமது பிலால் சித்திக்கும், அவரது வழக்கறிஞருமான புகழேந்தி ஆகியோர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்து சில விவரங்களை சேகரித்துள்ளனர். சுவாதி வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீஸாரும் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பல கோணங்களில் சுவாதி வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

எஸ்.மகேஷ்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close