Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராம்குமார்தான் கொலையாளியா? குற்றவாளியைக் கண்டுபிடிக்க திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு!

ன்போசிஸ் நிறுவன ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார்தான் குற்றவாளியா என்பதை உறுதி செய்ய நாளை ( திங்கட்கிழமை) அடையாள அணி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்  கடந்த மாதம் 24ம் தேதி சுவாதி என்ற இளம் பெண்  வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுவாதி கொலை செய்யப்பட்ட போது, ரயில் நிலைய பிளாட்பார கேண்டீன் ஊழியர் ஒருவரும் தமிழ்ச்செல்வன் என்ற  ஆசிரியர் மற்றும் வேறு சிலரும் சம்பவத்தையும் தப்பி ஓடிய நபரையும் நேரில் பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொலையை நேரில் பார்த்தவர்களை  வைத்து அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். நாளை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடக்கவுள்ளது. இதற்காக நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது.

அடையாள அணிவகுப்பு முடிந்ததும் ராம்குமார்  தொடர்ந்து சிறையில் அடைக்கப்படுவார். பின்னர் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். நடந்த சம்பவங்கள் வாக்குமூலமாக பெறப்பட்டு் நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும். 

இந்த வழக்கில் ராம்குமாருக்காக முதலில் ஆஜரான வழக்கறிஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி நெருக்கடிகள் வருவதாக கூறி விலகிக் கொண்டார். தற்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியும் வழக்கறிஞருமான ராம்ராஜ், ராம்குமார் வழக்கில் ஆஜராகியுள்ளார்.

வழக்கு குறித்து ராம்ராஜ் கூறுகையில்,'' ராம்குமார் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி, நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறேன். ஏனென்றால் அவர் மீது பதியப்பட்ட வழக்கே தவறானது. அத்துடன் ராம்குமாருக்கு ஜாமீனும் கேட்கப் போவதில்லை'' என்றார்.

மேன்சனில் தீவிர விசாரணை

இந்த வழக்கில் ராம்குமார்தான் கொலை செய்தார் என்பதற்கு நேரடி சாட்சியாக யாரையும் காவல்துறை சொல்லவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்த்து இதே போன்ற இளைஞர் ஒருவர் மேன்ஷனில் தங்கியிருந்தார் அவரை காணவில்லை என சூளைமேடு ஏ.எஸ். மேன்ஷன் காவலாளி கொடுத்த தகவல் அடிப்படையிலேயே ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலமும் இது வரை பெறப்படவில்லை.இதனால் ராம்குமார்தான் கொலையாளி என்பதற்காக ஆதாரங்களைத் திரட்ட போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராம்குமாருடன் அறையில் தங்கியிருந்தவரையும்  போலீசார் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. சுவாதி கொலையான அன்று ராம்குமார், காலை 6 மணியளவில் மேன்ஷனில் இருந்து வெளியே சென்றதை, பார்த்த உறுதியான சாட்சியை போலீசார் தேடி வருகின்றனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ