Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொது அமைதியைக் குலைக்க கருத்துரிமையையும் எழுத்துரிமையையும் பயன்படுத்தக்கூடாது: ராமதாஸ்!

சென்னை; 'கருத்துரிமையைப் பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளைப் பலி கொடுக்கலாம் என்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களை பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும்' என்று 'மாதொருபாகன்' நுால் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 'எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' புதினத்துக்கு தடை விதிக்க முடியாது என்றும், பெருமாள் முருகன் மற்றும் அவரது புதினத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எழுத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் நோக்கம் வரவேற்கத்தக்கது. ஆனால், மாதொருபாகன் புதினம் எழுத்து சுதந்திரத்தின் வெளிப்பாடா... அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை  இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதா என்பது விவாதத்திற்குரிய விஷயம் என்பதில் ஐயமில்லை.

எழுத்து சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும்; எழுத்தாளர்கள் போற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு எப்போதும் மாற்றுக்கருத்து இருந்ததில்லை. அதேநேரத்தில் எழுத்தாளர்கள் சமூக  அக்கறை கொண்டோராக இருக்க வேண்டும்; அவர்களின் படைப்புகள் பரபரப்பை ஏற்படுத்துபவையாக இல்லாமல் சமூகத்துக்கு பாடம் சொல்பவையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடு. 'மாதொருபாகன்' புதினம் இந்த இலக்கணத்திற்கு உட்பட்ட படைப்பா என்ற வினாவை எழுப்பினால், ‘இல்லை’ என்ற பதிலை யோசிக்காமலேயே கூறிவிடலாம்.

கண்ணகியை தெய்வமாக வழிபடும் சமூகத்தில், ஒரு சமுதாய பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா என்ற பெயரில் பொது இடத்தில் கூடி, தொடர்பில்லாத ஆண்களுடன் கலந்திருப்பார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா?... இதனால் அச்சமுதாயத்தினரின் உணர்வுகள் புண்படாதா? தங்களை காயப்படுத்தும் ஒரு படைப்பை தடை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. கருத்துரிமையைப் பாதுகாக்க ஒரு சமுதாயத்தின் உணர்வுகளைப் பலி கொடுக்கலாம் என்றால், அது புலிகள் உயிர் வாழ மான்களைப் பலி கொடுப்பதற்கு இணையான நீதியாகவே இருக்கும்.

ஒரு சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்தும் படைப்புக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்தீர்ப்பை பெற்றிருக்கின்றனர்.  மார்க்சிம் கார்க்கியின் ‘தாய் காவியம்’, கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ ஆகியவை சமூகத்திற்கு பாடம் கூறும் படைப்புகள். ஒருவேளை அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டால், அதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தினால் அது கருத்துரிமை மற்றும் எழுத்துரிமையை காக்கும் செயலாக அமையும். அதைவிடுத்து  ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் படைப்புக்குத் துணை நிற்பது எந்தவகை புரட்சி எனத் தெரியவில்லை.

1935ஆம் ஆண்டில் வெளியான புதுமைப்பித்தனின் சிறுகதையான ‘துன்பக்கேணி’யும், 1977ஆம் ஆண்டில் வெளியான வண்ணநிலவனின்  ‘கடல்புரத்தில்’ என்ற நெடுங்கதையும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு சில பேராசிரியர்களும், மாணவர்களும் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மிரட்டல் விடுத்ததாலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும் அந்த படைப்புகள் திரும்பப்பெறப்பட்டன.

அதேபோல், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவ.செந்தில்நாதன் தனது பரிசல் பதிப்பகத்தின் சார்பில் வீரபாண்டியன் என்பவர் எழுதிய பருக்கை என்ற புதினத்தை வெளியிட்டார். அந்த புதினம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக இருப்பதாகக் கூறி முடக்கப்பட்டது. இப்போது கருத்துரிமைக்காக கொடி பிடிக்கும் முற்போக்குவாதிகள் அப்போது கருத்து சுதந்திரத்திற்காக  ஏன் கொடி பிடிக்கவில்லை?

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையும், எழுத்துரிமையும்  மிகப்பெரிய வரங்கள். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதேநேரத்தில் அவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, அழிவுக்காக பயன்படுத்தப்படக்கூடாது. இனம், மொழி, மதம், சமுதாயம் ஆகியவற்றுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் படைப்புகளை உருவாக்கி  பொது அமைதியை குலைக்க கருத்துரிமையையும், எழுத்துரிமையையும் பயன்படுத்தக்கூடாது' இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close