Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தப்பிய ஓடிய சிறார்கள் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அதிரடி மாற்றம்!

சென்னை; சென்னை கெல்லீஸ் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து தப்பி ஓடி, பிடிபட்ட சிறுவர்களை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது அரசு.

சென்னை கெல்லீஸ் பகுதியில் அரசு சிறுவர் சீர்திருத்த காப்பகம் இயங்கிவருகிறது. இதில் 340 சிறுவர்கள் தற்போது தங்கிப் படித்து வருகின்றனர். போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத இந்த காப்பகத்திலிருந்து அடிக்கடி மாணவர்கள் தப்பித்து ஓடுவது நிகழ்ந்தது.

இதனிடையே கடந்த 10.7.2016 அன்று இரவு அங்கு தங்கியிருந்த 34 சிறுவர்கள் காம்பவுண்ட் சுவற்றைத் தாண்டிக் குதித்து தப்பித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவர்கள் தப்பிச்சென்ற காட்சியின் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பித்து ஓடுபவர்களை அங்கிருந்த மற்ற சிறார்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் காணாமல் போனவர்களில் 29 சிறுவர்களை காவல்துறையினர் வளைத்துப்பிடித்தனர்.

மற்றவர்களை தேடும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சீர்திருத்த காப்பகம் பாதுகாப்பு இன்றி செயல்படுவதால் எழுந்த குற்றச்சாட்டினால் இந்த சிறுவர்கள் அனைவரையும் செங்கல்பட்டில் இயங்கிவரும் சீர்திருத்தப்பள்ளியில் இன்று மாற்ற உத்தரவிட்டது தமிழக அரசு.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close