Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்போன் 'செயலி' மூலம் ஒரு தொழிற்சங்கம்! அசத்திய தமிழர்

சென்னை அயன்புரம் நெடுஞ்சாலையில் செல்போன் விற்பனையகம் வைத்து நடத்தி வருபவர் விஸ்வநாதன். 'செல்லூலார் ரீ-டைலர்ஸ்வெல்ஃபேர் அசோசியேசன்' என்ற அமைப்பின் தலைவர், இவர். செல்போன் விற்பனை, ரீ-சார்ஜ், செல்போன்களின் இந்த நிமிட மார்க்கெட் விலை, செல்போன் விற்பனையில் ஈடுபட்டுள்ளோருக்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாக அதற்கான " ஆப் " ஒன்றை விஸ்வநாதன் கண்டு பிடித்துள்ளார்.

இதுபற்றி விஸ்வநாதன் கூறியதாவது : "அனைவரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அசோசியேசனில் (கட்டணம் ஏதுமில்லை) பதிவு செய்து கொள்ள வேண்டும். ப்ளே ஸ்டோரில் சென்று CRWF என்று டைப் செய்ய வேண்டும். தொடர்ந்து இ-மெயில், பாஸ் வேர்டு கொடுத்து உள்ளே போய் தேவைப்படும் தகவல்களைப் பெறலாம். கடையின் பெயர், முகவரி, டின் நம்பர் (சேல் டாக்ஸ் பதிவெண்), பயனாளியின் மொபைல் எண் ஆகியவைகளை இதில் பதிந்து கொள்ள வேண்டும்.

அனைத்து கம்பெனி செல்போன்களின் அன்றைய விலை, டி.டி.எச். (டிஸ்-) தொடர்பான தகவல் பரிவர்த்தனை, அனைத்து மாவட்டங்களிலும் இருக்கிற செல்போன் தொழிலில் உள்ளவர்களின் குறைகள், எஸ்.எம்.எஸ். குறித்த தகவல்கள், ரீ-சார்ஜ் குறித்தவைகள், அசோசியேசனில் உள்ளோர் குடும்ப நிகழ்வுகள், அசோசியேசன் மூலமாக எதிர்கால திட்டம் குறித்த "வாட்ஸ்- அப் வழி கூட்டங்கள்" இப்படி பலவற்றை செய்ய முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக செல்போன் நிறுவனங்களின் விளம்பரங்களை இந்த "ஆப்" பில் கொண்டு வரவும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பயனுள்ள வழியில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோர் குடும்பங்களுக்கு பயன்படுத்தவும் இப்போது கைவசம் திட்டமிருக்கிறது. இன்னும் இதை எப்படியெல்லாம் கொண்டு போக முடியும் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் விஸ்வநாதன்.

'இந்த "ஆப்" கண்டு பிடிக்க எவ்வளவு நாள் ஆனது' ? "ஐந்துமாதங்கள் உழைப்பை செலவிட்டேன், பணம் பரவாயில்லை, ஒன்றரை லட்ச ரூபாய் மட்டுமே ஆனது. ஆனால், இந்த நவீனத்தின் மூலம் செல்போனின் 'செயலி' வழியில் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கிய திருப்தி இருக்கிறது" என்கிறார் விஸ்வநாதன்.

- ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ