Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிமுக நாடாளுமன்ற, மாநிலங்களவைக் குழு நிர்வாகிகள் நியமனம்!

சென்னை: அ.தி.மு.க. நாடாளுமன்ற, மாநிலங்களவைக் குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு மற்றும் மாநிலங்களவைக் குழு நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நியமனம் செய்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற குழு தலைவராக வேணுகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற குழு துணைத் தலைவராக நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களைவக் குழுத் தலைவராக நவநீதகிருஷ்ணனும், துணை தலைவராக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொறடாவாக விஜிலா சத்தியானந்த், பொருளாளராக செல்வராஜ், செயலாளராக விஜயகுமார் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ