Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.ஐ.டி.வளாகத்தில் மருத்துவ ஆராய்ச்சி மாணவி உள்பட இருவர் தற்கொலை!

சென்னை: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த விடுதி மாணவியும், பேராசிரியர் ஒருவரின் மனைவியும் தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் பரப்பரபை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. சபர்மதி விடுதியில் தங்கி, புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி (34) தத்துவவியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், மகேஸ்வரி நேற்று விடுதியில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையே, அதே ஐ.ஐ.டி.யில் இயற்பியல் உதவிப் பேராசிரியராக இருப்பவர் கணேசன். இவர், தனது மனைவி விஜயலட்சுமியுடன் (47), ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வார்டன் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், விஜயலட்சுமி நேற்று தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலைகள் பற்றிய தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார், சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மகேஸ்வரி மற்றும் விஜயலட்சுமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐ.ஐ.டி.யில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு, ஐ.ஐ.டி. நிர்வாகம் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஐ.ஐ.டி. நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மாணவி மற்றும் பேராசிரியர் மனைவி இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கின்றோம்.

ஆராய்ச்சி மாணவி மகேஸ்வரி தற்கொலை, துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. இது தொடர்பான வழக்கில் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் மாணவியும், பேராசியரின் மனைவியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், ஐ.ஐ.டி. வாளகத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ