Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாடு போடும் சாணி, உன்னைக் காப்பேனே பேணி' - நீங்க இதுல எந்த வகை வாட்ஸ்-அப்?

டையப்பா படத்தில் பெண்களை சாத்வீகம், பிரச்சோதகம், பயானகம் என  சூப்பர் ஸ்டார் பிரிப்பாரே, அதே போல இந்த 'வாட்ஸ் அப்' கனவான்களையும் சிலப்பல ரகங்களாக பிரித்துவிடலாம். அந்த பச்சை போதை மருந்தை பயன்படுத்தும் அனைவருமே கீழ்க்கண்ட ரகங்களில் ஏதோவொன்றில் அடங்குவார்கள். நீங்க எந்த டைப்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க மக்களே!
 
கும்பிடு குருசாமிகள்!
 
குட்மார்னிங், குட்நைட் சொல்வதையே பார்டரில் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்ப்பது போன்று பெருமிதத்தோடு செய்யும் புண்ணியவான்கள் இவர்கள். காலைக்கடன்களை முடிக்கிறார்களோ இல்லையோ, காலை வணக்கம் தவறாமல் வந்துவிடும். சாதாரண நாட்களிலேயே இப்படியென்றால் பண்டிகை நாட்களில் சொல்லவா வேண்டும்? 'பிளாக் அண்ட் ஒயிட்' மொபைல் காலத்திலேயே காலாவதியாகிப் போன 'தீபாவளி வாழ்த்துக்கள்' பிக்சர் மெசேஜை கலர்புல் பேக்ட்ராப்பில் அனுப்பி ரத்தக் காவு வாங்குவார்கள்.

ஃபார்வர்ட் சலோ!
 
நாடி, நரம்பு, கொழுப்பு எல்லாம் ஃபார்வர்ட் வெறி ஊறியவர்கள் இவர்கள். 'மாடு போடும் சாணி, உன்னைக் காப்பேனே பேணி' போன்ற காதல் 'சாம்பார்' கொட்டும் கவிதைகளில் தொடங்கி, 'பாட்ஷா' படத்தில் கோயிலுக்கு பாம் வைத்தது இவன்தான். இவனைப் பிடிக்க காவல்துறைக்கு உதவுங்கள்’ ரக ஃபார்வர்ட்கள் வரை வகைதொகையில்லாமல் அனுப்புவார்கள். அட, இதைக்கூட அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். 'இந்த மந்திரத்தை 16 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு சீக்கிரமே பிள்ளைப்பேறு உண்டாகும்' என்றெல்லாம் அனுப்புவார்கள்.

கடைசி வரைக்கும் ஃபார்வர்ட் மட்டுமே அனுப்பிக்கிட்டிருந்தா குழந்தை எப்படிய்யா பிறக்கும்?
 
கேங் லீடர்!
 
இந்த ரக ஆட்களின் முக்கிய வேலையே தினுசு தினுசான பெயர்களில் புதுசு புதுசாக குரூப் ஆரம்பிப்பதுதான். 'மாடி வீட்டு மங்காத்தாஸ்', ' கோலாகல குடும்பம்' என ரணகொடூரமாய் இருக்கும் இந்தப் பெயர்கள். இதில் ஏதோ சிபிஎஸ்இ ஸ்கூல் சேர்மன் கணக்காய், 'சொல்றதைக் கேக்கலனா குரூப்பைவிட்டு தூக்கிடுவேன்' என அவ்வப்போது 'கறார்' காட்டுவார்கள் (அப்படியே நீங்க தூக்கிட்டாலும் ரூபாய் மதிப்பு சரிஞ்சுடும் பாரு...).

இவர்களின் அதிகபட்ச சாதனையே குரூப்பில் யாருக்காவது பிறந்தநாள் வந்தால் சரியாக 12 மணிக்கு டிபி, குரூப் பெயரை எல்லாம் மாற்றுவது. இதற்கு தனி ஒருவனில் மெடல் வாங்கும் ஜெயம் ரவி போல முகத்தை வைத்துக் கொள்வார்கள். பீலிங் ப்ரவுடாமாம்! மேய்க்குறது எருமை. இதுல என்ன...?
 
கிளுகிளுப்பு கில்லாடிகள்!
 
வாட்ஸ் அப்பில் இதற்கென ஒரு சர்வதேச மாஃபியா நெட்வொர்க்கே செயல்படுகிறதுபோல. ' என்னப்பா குரூப் ஆஃப்ரிக்கா மாதிரி வறட்சியா இருக்கு' என யாராவது கேட்டால் போதும். உடனே படபடவென அப்லோடித் தள்ளுவார்கள். 'எம்.பி நிறைய இருக்கும். ஆபிஸ் வைஃபைல பண்ணு' என ஃப்ரீ அட்வைஸ் வேறு தருவார்கள். நல்லாருக்கு ஜி உங்க சமூக சேவை!
 
ஸ்லீப்பர் செல்ஸ்!
 
இப்படி ஒரு கேரக்டர் குரூப்பில் இருப்பதையே நாம் மறந்திருப்போம். ஆனால் கரெக்டாக நாம் ஏதாவது பொண்ணோடு இருக்கும் படத்தை டிபியாக வைக்கும்போது ஆஜர் ஆவார்கள். 'யார் மச்சி இந்தப் பொண்ணு?' (பொண்ணு இருக்கட்டும், முதல்ல நீ யார்றா?). பதில் சொல்லாவிட்டால் டிபியை சேவ் பண்ணி வைத்து நேரில் பார்க்கும்போது கேட்பார்கள். கிளுகிளுப்பு கில்லாடிகளுக்கான முதல் ரசிகனும் அவனாகத்தான் இருப்பான். 'மச்சி, அவ்ளோதானா? இன்னும் எதுனா இருந்தா அனுப்பு' என பீட்பேக் வேறு. வெரி டேஞ்சரஸ் ஸ்லீப்பர் செல்ஸ்.

'லிங்க்'கேஷ்வரர்கள்

குரூப்பில் காரசாரமாய் ஒரு சண்டை போய்க்கொண்டிருக்கும். அப்போது சம்பந்தமேயில்லாமல், ' இந்த லிங்க்கை க்ளிக் செய்தால் ராமராஜன் ட்ரவுசர் சலுகை விலையில் கிடைக்கும்' என மெசேஜ் அனுப்புவார்கள். என்னடா இது, என விசாரித்தால், 'புது பிசினஸ் மச்சி. எனக்கு இதுல கமிஷன் கிடைக்கும்' என்பார்கள். ட்ரவுசருக்கு எல்லாம் கமிஷனா? கடல்மாதாவே இந்த அபலையை அள்ளிக்கோ!

சரக்கு பாய்ஸ்!

எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருப்பார்கள். இவர்களின் வேலையே வீக்கெண்டில்தான். கரெக்டாக வெள்ளிக்கிழமை மாலையில் குரூப் டிபியை சரக்கு பாட்டிலாக மாற்றுவார்கள். 'இந்த வாரம் எங்க பிளான்? என்ன வாங்கப்போறோம்? எத்தனை பேரு?’ என நாசா விஞ்ஞானிகள் ரேஞ்சுக்கு சீரியஸாக பிளான் பண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

கச்சேரியின் நடுவே எடுக்கப்படும் படங்களையும் 'அப்லோட்' செய்து தள்ளுவார்கள். 'இந்த ரெமி மார்ட்டின் இருக்கே, அடடா... ஷீவாஸ் ரீகல் மாதிரி வருமாய்யா!’ என சில்லறைத்தனமான சிலாகிப்புகள்தான் இவர்களின் ட்ரேட்மார்க். டாஸ்மாக்கை மூடுனா மட்டும் பத்தாது. இவனுகளை தனியா கவனிங்க எசமான்!

இதுல நீங்க யாருன்னு உங்க ஆழ்மனசை கேட்டுக் கொள்ளவும்.

- நித்திஷ்
அட்மின்,
சல்பேட்டா கைஸ் & அங்கம் பங்கம் க்ரூப்ஸ்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close