Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி குடும்பத்துக்கு முதல்வர் நிதி உதவி!

சென்னை; பட்டினப்பாக்கம் அருகே வழிப்பறி சம்பவத்தின்போது இறந்த நந்தினியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “ பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்த நந்தினி மற்றும் நஜ்ஜீ  ஆகிய இருவரும் 4.7.2016 அன்று பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தின் போது, நிலை தடுமாறி  கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து நந்தினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், வழிப்பறி செய்தவரின் இரு சக்கர வாகனம் மோதியதில் சேகர் என்பவர்  உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் நஜ்ஜீ என்பவர்  பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.  பலத்த காயமடைந்துள்ள இவர் பூரண குணம் அடையும் வகையில் உயரிய சிகிச்சை தொடர்ந்து அளித்திட நான் உத்தரவிட்டுள்ளேன்.  மேலும், அவருக்கு  உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்யுமாறு  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் டாக்டர் வி.சரோஜா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன். 

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம்  ரூபாயும்,  பலத்த காயமடைந்து  சிகிச்சை பெற்று வரும்  நஜ்ஜீக்கு  ஒரு லட்சம்  ரூபாயும் வழங்க  நான் உத்தரவிட்டுள்ளேன்”  என்று கூறியுள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ