Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து 40 கிலோ தங்கம், ரூ.18 கோடி பறிமுதல்!'

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத 40 கிலோ தங்கம் மற்றும்  18 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. முன்னாள் மத்திய  அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது, வருமான ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை  அடையாறு, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீடுகள், தி.நகர் அலுவலகம், அவர் நடத்தி வரும் மதுபான ஆலைகள், மருத்துவக் கல்லூரி, நட்சத்திர விடுதி   உள்ளிட்ட 40 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், சொத்து, பணப் பரிமாற்ற ஆவணங்களைக் கைப்பற்றியும் விசாரணை செய்தனர்.

இந்தச் சோதனையில், ரூ.18 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் 40 கிலோ தங்கம் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஜெகத்ரட்சகன் ரூ.430 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

ஜெகத்ரட்சகன் கடந்த 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் அரசில் செய்தித் தொலை தொடர்புத் துறையின் இணை அமைச்சராக இருந்தவர்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில், ''சட்டத்துக்கு புறம்பாக கடந்த 3 நாட்களாக ஜெகத்ரட்சகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து சிறைக் கைதி போல நடத்துகின்றனர். வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது தவறு இல்லை.

அதே வேளையில் அவரது அன்றாடப் பணிகளை முடக்கும் வகையில் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்திருப்பது நியாயம் இல்லை. வருமான வரித்துறையின் இந்த செயலுக்குச் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது" என கூறி உள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close