Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் முதல் முறையாக சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக, சுரங்கப் பாதையில் சென்னை கோயம்பேடு முதல் ஷெனாய் நகர் வரையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்கி மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உள்ளனர்.

ஒரு ரயில் பெட்டியுடன் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணாநகர், ரவுண்டானா வழியாக ஷெனாய் நகருக்கு மெட்ரோ ரயிலை அதிகாரிகள் இயக்கி ஆய்வு நடத்தினர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வந்தது.

இதில், முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு, இந்த வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஜூன் 29 ம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ