Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது! - தமிழிசை

கொடைக்கானல்: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சவுந்தர்ராஜன் கூறி உள்ளார்.

கொடைக்கானலில் உள்ள வில்பட்டி கிராமத்துக்கு சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். அதன்பின் அவர் செய்தியளர்களை சந்தித்தார். அப்போது, ''10 ஆண்டுகளுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர்கள் மாநாட்டினை கூட்டி உள்ளார். அதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

தீவிரவாதிகள் கொடைக்கானல் மலைப்பகுதியை பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்துவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதனால், காவல்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. இது குறித்தும் அரசு கண்காணிக்க வேண்டும். மலை கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையம், முதியோர்களுக்கான பென்சன் தொகை பெறுவதற்கும் வசதி செய்து தர வேண்டும்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் திறந்தவெளி கழிப்பிடத்தை உபயோகிப்பது சுகாதார சீர்கேட்டை உருவாக்கி உள்ளது.

அதனால், தமிழக அரசு இதுகுறித்து 3 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். இப்பகுதி மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கீழ்குண்டாறு திட்டத்தினை விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ