Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின்மயானம்... சவால் பணியில் பி.ஏ. பட்டதாரி பிரவீனா!

முற்றிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் தொழில்களில் அரிதான சில பணிகளில் பெண்கள் ஈடுபடுவது உண்டு. அவற்றில் ஒன்று மயானத்தில் சடலங்களை எரிப்பது. தமிழகத்தில் காஞ்சிபுரம் சேலம் உள்ளிட்ட சில இடங்களில் சடலங்களை எரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், இதுவரை மின் மயானங்களின் பக்கம் பெண்கள் தலை காட்டியதில்லை.

இப்போது மின்மயானப் பணியிலும் பெண் ஒருவர் காலடி வைத்துள்ளார். அவர், பிரவீனா சாலமன்.  சென்னை வேலங்காடு  மின்மயானத்தின் பொறுப்பாளராக பணியாற்றிவரும் பிரவீனா சாலமன் ஒரு பட்டதாரி என்பதும் ஆச்சர்யமான தகவல். சென்னையில் இயங்கிவரும் 38 மின்மயானங்களில் இந்த ஒரு மின்மயானத்தில்  மட்டும்தான் பெண் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.

ஏதோ ஒரு சம்பளப் பணிக்காக இந்த வேலையில் பிரவீனா சேரவில்லை. சிறுவயதிலிருந்தே சமூக அக்கறை கொண்ட பெண்மணியாக வளர்ந்த அவர், சென்னை பல்கலையில் பி.ஏ ஆங்கிலம் பட்டம் பெற்று பின்னர் 'இந்தியன் கம்யூனிட்டி சர்வீஸ்' என்ற  தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஏழைச் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் குழந்தைகளுக்கு கல்வி சொல்லித்தரும் பணியை அங்கு மன நிறைவுடன் செய்திருக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டு பிரவீனா சாலமனின் பணி மாறியது. அவர் சேவையாற்றி வந்த தொண்டு நிறுவனம் வேலங்காடு மின் மயானத்தை ஏற்று நடத்த முன்வந்தது.  அப்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பு பிரவீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பெண்கள் போகவே யோசிக்கும் மயானத்தில் எந்த நெருடலும் இன்றி பணியாற்ற புகுந்தார் பிரவீனா. அண்ணா நகரையொட்டி சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் இந்த மின்மயானம் அமைந்துள்ளது. 

பிரவீனா பணியில் சேர்ந்த புதிதில், ஒரு பெண் மின்மயானத்தை நிர்வகிப்பதா என கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சிலரிடமிருந்து. அப்பகுதி மக்களே பிரவீனாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தொடர்ந்து இந்த பணியைச் செய்தால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவதாக கூட சிலர் மிரட்டிப்பார்த்தனர். ஆனால் உறுதியாக நின்றார் பிரவீனா.

துர்நாற்றம் வீசிக் கொண்டு, மிகவும் மோசமான நிலையில் இருந்த மின்மயானத்தின் சுற்றுப்புறத்தை முதலில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவரது முயற்சியால் மயான வளாக சுவர்களில் அழகிய ஓவியங்கள் இடம்பெற்றன. வளாகத்தில் இருந்த மரங்கள் மீது தனிக்கவனம் செலுத்தினார். வளாகத்தில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டது. இப்போது பார்த்தால் அது ஒரு மின்மயானம் போலவே தெரியாது: அழகிய பூங்கா போல காட்சியளிக்கிறது. இப்போது பிரவீனா அந்தப் பகுதி மக்களின் பாராட்டுக்குரிய பெண்மணியாக மாறியிருக்கிறார்.

ஒரு உடலை எரிப்பதற்கு  மாநகராட்சி சார்பில் பிரவீனா குழுவினருக்கு 750 ரூபாய் வழங்கப்படுகிறது. சென்னை பெரு வெள்ளத்தின் போது,வேலங்காடு மின் மயானம் சிறப்பாக பணியாற்றியிருக்கிறது. மற்ற பகுதிகளில் மயானங்கள் முடங்கியபோது, பல உடல்கள் இங்கே கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டன. அந்த சமயத்தில் ஓய்வின்றி நாளொன்றுக்கு 4 முதல் 5 சடலங்களை பிரவீனா குழுவினர் எரித்திருக்கின்றனர்.

பிரவீனாவின் இந்த பணி, மற்றொரு பெண்ணை ஈர்க்க, கடந்த 6 மாதங்களுக்கு முன்,  திவ்யா என்ற அந்த இளம்பெண்ணும் பிரவீனாவுடன் கரம் கோத்திருக்கிறார்.

“சொந்த விருப்பத்தின் பேரிலேயே இந்த பணியில் சேர்ந்தேன். எப்போது வேலை வருமென்று தெரியாத பணி இது. அதனால் எந்த நேரத்திலும் நாங்கள் தயாராகவே இருப்போம். மனதுக்கு திருப்தி தருகிறது'' எனக் கூறும் பிரவீனா இரண்டு குழந்தைகளின் தாயும் கூட.

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ