Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலியல் தொல்லைக்குள்ளாகும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு 90 நாட்கள் விடுமுறை!


புதுடெல்லி:பாலியல் தொல்லைக்குள்ளாகும் அரசுப் பெண் ஊழியர்களுக்கு, 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை  வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உடல் ரீதியாக துன்புறுத்துவது, ஆபாசப்  படங்களைக்  காண்பித்து துன்புறுத்துவது என்கிற ரீதியில் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த விடுமுறையை வழங்க வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த விடுமுறை அவர்களின் விடுப்பு கணக்கில் சேராது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கான பேறுகால விடுமுறையை, இனி 26 வாரங்களாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இது தொடர்பான புதிய மசோதாவை,  நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ