Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலாம் பெயரை கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது..! தேர்தல் ஆணையம்


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், 'அப்துல் கலாம் லட்சிய இந்தியா' என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதனிடையே, பொன்ராஜ் தொடங்கியுள்ள கட்சிக்கு, அப்துல் கலாமின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசியல் காரணங்களுக்காக அப்துல் கலாம் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், முத்துமீரான் மரைக்காயரின் மனு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை, இந்தத் தடை உத்தரவு நீடிக்கும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில்,"முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது. பிரபல தலைவரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தலைவர் பெயரைப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியாது" என்று கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்க முத்துமீரான் மரைக்காயருக்கு அவகாசம் அளித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close