Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5.35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னை: அடுத்த ஓராண்டில் மாணவர்களுக்கு 5.35 லட்சம் மடிக்கணினிகளும், 1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களும் வழங்கப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் 2016-17 ம் நிதி ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார்.

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில், நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ15,854.47 கோடியாக இருக்கும் என தெரிவித்த அவர், அடுத்த ஓராண்டில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 5.35 லட்சம் மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

மேலும், " மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஏழை எளியோருக்கு 10 லட்சம் வீடுகளும், அடுத்த ஒரு ஆண்டில் ரூ.420 கோடியில் சூரிய மின் சக்தி வசதியுடன் 20 ஆயிரம் வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ