Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக பட்ஜெட்: கடலோர மாவட்டங்களுக்காக ரூ.445 கோடியில் வெள்ளப் பாதுகாப்புத் திட்டம்!

சென்னை: இந்த நிதியாண்டில் (2016-2017) நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்தும் திட்டங்களைச்  செயல்படுத்துவதற்காக, ரூ.445.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டை தாக்கல் செய்து, பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழக பட்ஜெட்(2016-2017) கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

அப்போது, ''வைகை மற்றும் நொய்யல் ஆறுகளின் நீர்வரத்தினை நிலைப்படுத்தவும், வனப் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காகவும், அந்த ஆறுகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள காடுகளின் வளத்தைப் பெருக்கி பல்லுயிரின பாதுகாப்பை மேம்படுத்த 24.58 கோடி ரூபாய் செலவில் ‘வைகை மற்றும் நொய்யல் ஆறுகளுக்கு புத்துயிரளித்தல்’ என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும்.

வன விலங்குகளின் தாக்குலால் ஏற்படும் உயிரிழப்பு, பயிர்ச் சேதம், உடைமைகளுக்கு ஏற்படும் சேதம் போன்றவற்றிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை, மாநிலப் பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளுக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.

நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவோரின் பங்கேற்புடன் செயல்படுத்தப்படும் குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்காகவும், இந்த அரசு நீர் ஆதார மேலாண்மைக்கு ஒரு மாநிலம் தழுவிய இயக்கத்தை மேற்கொள்ளும்.

குடிமராமத்து முறைக்கு புத்துயிரூட்டுவதற்காக, முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஊக்க நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருங்காலத்தில் நபார்டு வங்கி உதவியுடன் இந்த நிதி கணிசமான அளவிற்கு உயர்த்தி வழங்கப்படும்.

அண்மையில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, நிரந்தர வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள, வடிகால்களை அகலப்படுத்துதல், வாய்க்கால்களின் வரப்புகளையும், நதிக்கரைகளையும் பலப்படுத்துதல் போன்ற வெள்ளத் தடுப்பு பணிகளை ரூ.140 கோடி செலவில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், 2016-2017 ஆம் ஆண்டில் இந்த அரசு மேற்கொள்ளும்.
 

எளிதாகப்  பாதிப்புக்குள்ளாகக் கூடிய சென்னை போன்ற கடலோர மாவட்டங்களுக்காக, விரிவான வெள்ளப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை இந்த அரசு தயாரித்து வருகிறது. இத்திட்டங்கள் படிப்படியாகச்  செயல்படுத்தப்படும்.  இந்த நிதியாண்டில் நபார்டு வங்கி உதவியுடன் வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் ஆதாரங்களை  மேம்படுத்தும் திட்டங்களைச்  செயல்படுத்துவதற்காக ரூ.445.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ