Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக பட்ஜெட்: மின்சார மானியத்திற்காக ரூ.9,007 கோடி நிதி ஒதுக்கீடு!

சென்னை: தமிழக பட்ஜெட்டில், மின்சாரத்திற்கான மானியமாக நடப்பாண்டு ரூ.9,007 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை 11 மணிக்கு, 2016-17-ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது அவர், ''டாஸ்மாக் கடை மூடல், இலவச மின்சாரத்தால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் ரூ.2,52,431 கோடியாக உள்ளது.

தமிழக அரசின் வரி வருவாய் ரூ.90,691.87 கோடியாக உயரும். தமிழக அரசின் செலவினம் ரூ.164,029.56 கோடியாக இருக்கும். நடப்பாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும். தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி. உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிதியாண்டிற்கு மின்சார மானியத்திற்காக ரூ.9,007 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த ரூ.182 கோடியும், தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.32.94 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close