Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக பட்ஜெட்: நிதி பற்றாக்குறை ரூ.40,533.84 கோடி!

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது, 2016-2017ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது, ''டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் 500 மதுபானக் கடைகளை மூடியதால் வருவாய் ரூ.6,636.08 கோடி குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான மத்திய வரிகளில் மாநில அரசின் பங்குத் தொகை 23,018.12 கோடி ரூபாயாக குறைத்து கணக்கிடப்பட்டுள்ளது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலான மானியங்கள் மற்றும் மாநிலத் திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியுதவி ஆகியவற்றை கணக்கில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் உதவி மானியங்கள் 24,741.15 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டு உள்ளது.

மேலும், சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாலும், பல்வேறு நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த உள்ளதாலும், மாநிலத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன. அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 15,854.47 கோடி ரூபாயாக திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.40,533.84 கோடியாக இருக்கும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close