Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தலைமைச் செயலகத்தில் தி.மு.க. நாற்காலிகள்! - கோட்டையில் பரபரப்பு

சென்னை: தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அறையில் உள்ள நாற்காலிகளை மாற்றிவிட்டு, தி.மு.க. தரப்பில் புதிய நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம், கடந்த மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய அறை மற்றும் இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று தி.மு.க. குற்றம்சாட்டியது.

மேலும், சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு சிறப்பு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகர் தனபாலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து,  பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு புதிய அறை ஒதுக்கப்பட்டது. அதில் சோபா மற்றும் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.

 

இந்நிலையில் விடுமுறை தினமான இன்று, எதிர்க்கட்சித் தலைவர் அறையில் அரசு சார்பில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் சோபாக்களை தி.மு.க.வினர் அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக தி.மு.க. சார்பில் வாங்கப்பட்ட 50 புதிய நாற்காலிகளை இறக்கி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, புதிய நாற்காலிகள் போடப்பட்ட விவகாரத்தில் எங்களிடம் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தலைமைச் செயலகத்தில் வட்டாரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- தேவராஜன்

 

எடிட்டர் சாய்ஸ்