Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலாற்றில் தடுப்பணை விவகாரம்:சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் அமளி!

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கை குறித்து விவாதிக்க,  ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், சட்டமன்றத்தில் தி.மு.க., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கடந்த 21-ம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் 2016-17 ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(திங்கள்) மீண்டும் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 5 பேரின் மறைவுக்கு முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், " பாலாற்றில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்தும் விவகாரத்தில் ஆந்திர அரசை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி, பாலாறு பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டும். பாலாற்றைத் தமிழகம் பெரிதும் நம்பி இருக்கிறது. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னைக்கு பாலாறு நீர் ஆதாரமாக திகழ்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர், ஆந்திர முதல்வரைச் சந்தித்துப் பேச்சு நடத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்,

அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். ''பாலாறு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், அவையில் இவ்விவகாரத்தை விவாதிக்க முடியாது" என்றார்.

முன்னதாக, ஸ்டாலின் பேச அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் சட்டமன்றத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே சிறிது நேரம் கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர் தனபால், " சபையை எப்படி நடத்த வேண்டும் என தி.மு.கவினர் எனக்கு பாடம் சொல்லித்தர தேவையில்லை. சட்டசபை நல்ல முறையில் நடைபெற தி.மு.கவினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தி.மு.கவினர் கூச்சலிட்டாலும், அவை முன்னவர் பேசிய பின்னர்தான் ஸ்டாலினுக்கு பேச அனுமதி தரப்படும்'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close