Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வழக்கறிஞர்களின் முற்றுகையால் திணறிய சென்னை உயர் நீதிமன்றம்!

மேலும் படங்களுக்கு...

ழக்கறிஞர் சட்டத் திருத்த விதிகளை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்கறிஞர்கள் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.

1961 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34(1)ல்,  சென்னை உயர் நீதிமன்றம்  சட்டத் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி விதிகளை மீறும் வழக்கறிஞர்கள் மீது நீதிபதிகளே நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கறிஞர்களுக்கு எதிரானது எனவும், அதை திரும்பப் பெறவேண்டும் என்றும் எதிர்ப்புக் கிளம்பியது. தற்போது போராட்டங்களால் நீதித்துறை திணறிவருகிறது. விதிகளை மீறும் வழக்கறிஞர்களை, கோர்ட்டில் ஆஜராகி வாதாடுவதில் இருந்து தடுக்கும் விதமாக அவர்களுக்கு நீதிபதிகளே தடை விதிக்கலாம் என்றும் இந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தை வழக்கறிஞர்கள் தொடங்கினர்.

மேலும் படங்களுக்கு...

கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கிய இந்த புறக்கணிப்புப் போராட்டம், இன்றுவரையில் தொடர்ந்து வருகிறது. சட்டத் திருத்த அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை இருக்காது என்று நீதிபதிகள் கூறினார்கள். அதையே இந்திய பார் கவுன்சிலும் தெரிவித்து, சமரசம் செய்தது. ஆனால் வழக்கறிஞர்கள் அதை ஏற்க மறுத்து, தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டத்தை ஜூலை 22 ம் தேதிக்குள் விலக்கிக் கொள்ளாவிட்டால், அதில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக,  'கூட்டு நடவடிக்கை குழு' என்ற அமைப்பை ஏற்படுத்தி, தங்கள் எதிர்ப்பை நேரடியாக காட்டத் தொடங்கினர். இந்தக் குழு, புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை, ஜூலை 25- ம் தேதியன்று முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை முதலே தமிழகம் முழுவதுமிருந்தும் திரண்டு வந்த வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றம் அருகில் ஒன்று கூடினர். ஆவின் கேட், எம்.பி.ஏ. கேட், எஸ்பிளனேடு காவல் நிலைய கேட், ரிசர்வ் வங்கி அருகில் உள்ள 2 கேட் என 5 நுழைவு வாயில்கள் மக்கள் அதிகமாக வந்து செல்லும் வழிகளாகும். (நீதிபதிகளுக்கென சிறப்பு வழிகள் தனியே 2 உள்ளன). போராட்ட அறிவிப்பினால் இன்று  அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்றத்தின்  ஏழு நுழைவாயில்களில் ஐந்து நுழைவாயில்கள் முழுமையாக தமிழ்நாடு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் காலை 9 மணிமுதல் வந்து விட்டது. நீதிமன்றப் பணியாளர்கள் உள்ளிருந்து வெளியே வர, வெளியிலிருந்து உள்ளே போகவும் பெரும் சிரமப்பட்டனர்.

மேலும் படங்களுக்கு...

உயர் நீதிமன்ற ஆவின் கேட் வழியாகப் புறப்பட்டு, நீதிமன்றத்திற்கு ஊர்வலமாக வந்த வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் அலுவலகத்தை அடைந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீஸாருக்கும் வழக்கறிஞர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வழக்கறிஞர்கள் போராட்டத்தில் அசம்பாவிதம் நேராவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9.30 மணிக்கே, கோட்டை ரயில் நிலைய மேம்பால நடைமேடைத் தொடங்கி, ராஜா அண்ணாமலை மன்றம்  வரை ஆயிரக்கணக்கில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஸ்ரீதர், சேஷசாயி, இணை கமிஷனர்கள் அன்பு, சந்தோஷ்குமார், துணைக் கமிஷனர்கள் ஜெயக்குமார், செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். 10 வரிசைகளில் போலீஸார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

கூடுதல் கமிஷனர் சேஷசாயி இருந்த மெயின் கேட்டில், திடீரென காலை 11.30 க்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு பதற்றமான சூழலை உருவாக்கியது. உயர் நீதிமன்றத்தின் மெயின் கேட்டில் குவிந்திருந்த போலீசாரை மீறி அவ்வப்போது வழக்கறிஞர்கள் கோர்ட்டுக்குள் நுழைய முற்படுவதும், போலீசார் அதை தடுப்பதுமாகவே பத்து நிமிடத்துக்கு ஒருமுறை நடக்க, போலீஸார் ஒருகட்டத்தில் சோர்ந்து போயினர். வழக்கறிஞர்கள் நிலையும் அதுதான். வழக்கத்தை விட இன்று கூடுதல் வெயில் வேறு. அதேவேளையில் அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்ள தலைமை நீதிபதி கவுல் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் சென்றனர்.

மேலும் படங்களுக்கு...

நீதிபதிகளின் கார் கண்ணில் தெரியும்போதெல்லாம், சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுமாறு ஓங்கி குரலெழுப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

போராட்டத்தின் ஒரு நிகழ்வாக,  கோட்டை ரயில் நிலையம் மேம்பால பெட்ரோல் பங்க் முன்பாக ( ராஜா அண்ணாமலை மன்றம் முகப்பு) தற்காலிக மேடை அமைத்து போராட்டம் குறித்து விரிவாகப் பேசினர் கூட்டுக்குழு நிர்வாகிகள். அப்போது வழக்கறிஞர்களில் ஒரு தரப்பு 'பாடை' ஒன்றை ஏற்பாடு செய்து அதே இடத்தில் கொளுத்தி விட, அருகிலிருந்த பெட்ரோல் பங்க் நிர்வாகிகளிடம் பதற்றம் பற்றிக் கொண்டது.
இந்த போராட்டத்தினால் சென்னையின் முக்கியப் பகுதிகள் முடங்கியது என்றே சொல்லலாம். சென்னை பாரிமுனை டூ கடற்கரை, கோட்டை வழியாக எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பிராட்வே பேருந்து நிலையம் வெறிச்சோடியதுபோல் காணப்பட்டன. பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. சட்டக் கல்லூரி மாணவர்களில் பலர் கல்லூரிக்கு போகாமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"டெல்லியில் 2 நாட்கள், இந்திய பார் கவுன்சில் தலைவர் மன்னன்குமார் மிஸ்ரா தலைமையில் நடந்த இந்திய பார் கவுன்சில் கூட்ட தீர்மானத்தின்படி, தமிழக வழக்கறிஞர்கள் 126 பேரை இடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் ஆதரவு தெரிவித்தது. வழக்கறிஞர்கள் சட்டத் திருத்தத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் 105 வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர, 200 வழக்கறிஞர்களின் பெயர்களை பட்டியலாக தயாரித்து இந்திய பார் கவுன்சிலுக்கு, தமிழ்நாடு பார் கவுன்சில் அனுப்பி உள்ளது. இப்படி வழக்கறிஞர்களை ஒடுக்கும் சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறவேண்டும் என்பதை வலியுறுத்திதான் 'கூட்டு நடவடிக்கைக் குழு' திட்டமிட்டபடி உயர் நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை அறிவித்து நடத்தியிருக்கிறது" என்றனர்.

- ந.பா.சேதுராமன்
படங்கள்:  பா.காளிமுத்து, ப.சரவணகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close