Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை அருகே கடலில் சந்தேகப்பொருள் கண்டெடுப்பு..! காணாமல்போன விமானத்தின் பாகமா?


சென்னைக்கு அருகே, கடலில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள், காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து, 29 பேருடன் அந்தமானில் உள்ள போர்ட்பிளேருக்கு கடந்த 22 ம் தேதி ஏ.என்-32 ரக ராணுவ விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் அது  திடீரென மாயமானது. அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படுவதால், கடந்த 5 நாட்களாக அந்த விமானத்தை தேடும்பணி நடந்து வருகிறது. தேடும் பணியை விமானப்படை, கப்பல் படை, கடலோர காவல்படை ஆகியவை இணைந்து மேற்கொள்கின்றன.

இந்நிலையில் வங்கக் கடலில் சென்னைக்கு அருகே, சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'சென்னையில் இருந்து சுமார் 145 கடல் மைல் தொலைவில், மர்மப் பொருள் தென்பட்டு உள்ளது' என்று கடலோர காவல்படை விமானிகள்,  கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான பொருள் மாயமான விமானத்தின் பாகமா என்று அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்