Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படாளத்தை பரபரக்க வைத்த பலநூறு பாம்புகள்...

காஞ்சிபுரம் மாவட்டம் படாளத்தில் உள்ள மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாம்புகளை பிடித்துவருகிறார்கள்.ஒன்றிரண்டு அல்ல, 1000க்கும் மேற்பட்டவை என்கிறார்கள். பாம்பு பிடிப்பதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு, மகுடி ஊதி இந்த பாம்புகள் இதுவரை பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள். ஆலையைச் சுறறிய புதர்ப் பகுதிகளில் இருந்து மகுடியும் பாம்பும் கையுமாகப் பாம்பு பிடிப்பவர்கள் சர்வசாதாரணமாக வெளிவருகிறார்கள். பிடிக்கப்பட்ட பாம்புகளைக் கணக்கெடுத்து கோணிப்பைகளில் அடைத்து விடுகிறார்கள். பாம்புப் பிடிக்கும் ஏரியாவில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி இல்லை.

இது குறித்து மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “சுகர் மில்லில் வேலை செய்பவர்கள், இங்கே உள்ள குடியிருப்பில் தங்குகிறார்கள். மழை பெய்ய ஆரம்பித்ததால் பாம்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. ஊழியர்கள் வெளியில் செல்லும் போதும், தோட்டத்தில் உள்ளவர்களும் பாம்புகளைப் பார்த்துப் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அவசரகால நடவடிக்கைக்காகக் குடியிருப்புப் பகுதி, அலுவலகப் பகுதி போன்ற இடங்களில் உள்ள பாம்புகளைப் பிடித்துவருகிறோம். பாம்புகள் தொடர்ந்து பிடிக்கப்படுவதால் இன்னும் கணக்கிட முடியவில்லை.  பாம்புப் பிடிக்க வந்தவர்கள் மகுடி ஊதி பாம்புப் பிடித்து வருகிறார்கள். மகுடி சத்தத்திற்கு பாம்புகள் வர தொடங்குகின்றன.” என்கிறார்.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா உதவி இயக்குனர் சுதாகரனிடம் பேசினோம். “வன விலங்குகள் சட்டத்தின்படி பாம்புகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம். பாம்புகளைப் பிடிப்பதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட வனத்துறை அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும். வனத்துறையினரே  எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பாம்புகளைப் பாதுகாத்து வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பாம்புகளைக் கொல்வது சட்டப்படி தவறு. பாம்பிற்குக் காது கிடையாது. அதிர்வை மட்டுமே பாம்புகள் உணரும். மகுடி  வைத்து பாம்பு பிடிப்பது சாத்தியமே இல்லை.” என்கிறார்.

பிடிக்க பிடிக்க பாம்புகள் வந்துகொண்டே இருப்பதால் இன்னும் பீதி விலகாமல் உள்ளனர் இப்பகுதியில் வசிக்கும் மக்கள்
 

- பா.ஜெயவேல்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close