Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனமழை... கடும் வெள்ளம்- தத்தளிக்கும் ஓசூர்!

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூரில் நேற்று (செவ்வாய்) பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தாய், மகள் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஓசூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள குளங்கள், ஏரிகள் வேகமாக நிரம்பின. இந்நிலையில், நேற்று இரவு 7 மணி முதல் ஓசூர் பகுதியில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, அதன் பின் கனமழையாக மாறியது. 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த கனமழையால் ஓசூர் தர்ஹா பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரி, தேர்ப் பேட்டை ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிந்தன.

நிரம்பிய ஏரிகளிலிருந்து வெளியேறிய வெள்ளம், கழிவு நீருடன் கலந்து திடீரென ஊருக்குள் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தத்தளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள், அவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில், ஓசூர் அவ்வை நகர் அருகே உள்ள எஸ்.எம்.நகரை சேர்ந்த வனிதா (40) மற்றும் அவரது மகள் தர்ஷினி (13) ஆகிய இருவரும் வெளியே சென்றுவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மூக்கண்டப்பள்ளி என்ற இடத்தில் இடுப்பளவு மழை நீர் தேங்கி நின்றது. இதனால் அவர்கள், இருசக்கர வாகனத்தை மேடான ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு, தேங்கி நின்ற மழை நீரைக் கடந்து, வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளனர். அந்த நேரத்தில், ஏரிகளில் இருந்து சீறிப் பாய்ந்து வந்த வெள்ளம் வனிதாவையும், அவரது மகள் தர்ஷினியையும் இழுத்துச் சென்றது. அப்போது இருவரும் வெள்ள நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள், மூக்கண்டப்பள்ளி அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் கரை ஒதுங்கின.

 

இதேபோல் ஓசூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் நந்தகுமார் (26) என்பவர், சொந்த வேலை காரணமாக நேற்று எஸ்.எம்.நகருக்கு வந்திருக்கிறார். அப்போது, மழை வெள்ளம்  ஊர் முழுவதும் சூழ்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறார். அதன்பின் மழை நீரை கடந்து, சாலையில் நடந்து சென்ற அவரையும் ஏரிகளில் இருந்து பாய்ந்து வந்த வெள்ளம் அடித்துச் சென்றது. இதில் அவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 3 பேருடைய உடலையும் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓசூர் பகுதியில் நேற்று இரவு மட்டும் 141 மில்லி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. மழை வெள்ளம் பாதித்தப் பகுதிகளை, மாவட்ட ஆட்சியர் கதிரவன், வருவாய் அதிகாரி கிறிஸ்டி ஆகியோர் பார்வையிட்டு, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். மேலும், ஓசூர் நகராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் ராமு ஆகியோர் தலைமையிலான குழுவினரும், மழை வெள்ளத்தைப் பார்வையிட்டு, மீட்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

- எம் புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ