Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காங்கிரஸ்-த.மா.கா மோதலால் குப்பையில் கிடக்கும் காமராஜர் சிலை!

வேலூர்: காங்கிரஸ், த.மா.கா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால், வாணியம்பாடியில் சேதமடைந்த காமராஜர் சிலை சரி செய்யப்படாமல் குப்பை மேட்டில் கிடத்தி வைக்கப்பட்டுள்ள அவலம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், திருவள்ளுவர் சிலையை பிளாஸ்டிக் கவரில் சுற்றி அவமரியாதை செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல், தற்போது காமராஜர் சிலை குப்பை மேட்டில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது, வாணியம்பாடியில் சர்ச்சையை உண்டாகி இருக்கிறது.

வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல ஆண்டுகளாக காமராஜர் சிலை ஒன்று இருந்தது. கடந்த 16ம் தேதி இரவு, அந்த சிலையின் பீடம் உடைந்து காணப்பட்டது. அது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டத்தில், வாகனம் மோதி சிலை பீடம் சேதமடைந்ததாக தெரிய வந்தது. பீடம் சேதமானதால் அதனை சரி செய்து மீண்டும் நிறுவ நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் முடிவு செய்தார்.

அதன்படி, பீடத்தை சரி செய்யும் வேலையை அவர் தொடங்கியபோது, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும் தற்போதைய த.மா.கா நிர்வாகியுமான சுப்ரமணி என்பவர், 'நாங்கள் காங்கிரசில் இருந்தபோது நிறுவிய சிலை அது. அதனை நாங்கள் தான் மீண்டும் நிறுவுவோம்' என்று போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதை தொடர்ந்து, போலீசார் சிலையை சீரமைக்கும் பணியை நிறுத்த அறிவுறுத்தியதால் சிலை நிறுவப்படாமல் அப்படியே கேட்பாரற்று குப்பைக் கொட்டும் இடத்துக்கு அருகே கிடத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வாணியம்பாடியைச் சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம் பாஷாவிடம் கேட்டபோது, ''இரண்டு வாரத்திற்கு முன் காமராஜர் சிலையின் பீடம் வாகனம் மோதி சேதமடைந்தது. அதனால் பாரம் தாங்காமல் சிலை விழுந்துவிடும் என்பதால், சிலையை அப்புறப்படுத்தி பீடத்தை சரி செய்யும் வேலையை நகர செயலாளர் தொடங்கினார். ஆனால், த.மா.காவை சேர்ந்தவர்கள் 'காங்கிரஸ் கட்சியில் நாங்கள் பொறுப்பில் இருக்கும்போது அந்தச் சிலையை நிறுவினோம், அதனால்  அதனை நாங்கள் தான் சரி செய்வோம்' என்று காவல்துறையில் புகாரளித்ததால் சிலையை நிறுவ முடியாமல் போனது.

இது, பொது இடத்தில் இருக்கும் சிலை. யார் அப்போது நிறுவியிருந்தாலும் காங்கிரஸ் நகர கமிட்டியில் இருப்பவர்கள் தான் மீண்டும் நிறுவ உரிமை உள்ளது. ஆனால், த.மா.கா.வினர் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். காவல் துறை, அவர்களிடம் புகார் பெற்றது சட்டப்படி தவறு. தற்போது சிலையை பாதுகாப்பாகதான் வைத்திருக்கிறோம். பிரச்னை களையப்பட்டு விரைவில் சிலையை நிறுவுவோம்" என்றார்.

இது தொடர்பாக த.மா.கா. தரப்பினர் கூறும்போது, ''நாங்கள் காங்கிரசில் இருந்தபோது வைத்த அந்த சிலையை, தற்போது காங்கிரசார் செப்பணிட்டு தாங்கள் பெயர் எடுக்க நினைக்கின்றனர். அதை நாங்கள் அனுமதிக்க முடியாது. அந்தச் சிலையை அவர்கள் எங்களிடம் ஒப்படைத்தால், நாளையே கூட நாங்கள் காமராஜர் சிலையை நிறுவ தயார்" என்றனர்.

- அ.அச்சணந்தி

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ