Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுவாதி கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கை! #SwathiCaseFIR

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24-ம் தேதி மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை முதலில் சென்னை எழும்பூர் ரயில்வே போலீஸார் விசாரித்தனர். ரயில்வே இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சுவாதி கொலை வழக்குக்கு எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அதில் உள்ள விவரம் இதுதான்...

'நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், டிக்கெட் கவுன்ட்டர் அலுவலக வணிகப் பிரிவு மேற்பார்வையாளர் ரகுபதி, என்பவர் சுவாதி கொலை தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கடந்த 24.6.2016 அன்று காலை 6.40 மணியளவில் டிக்கெட் கவுன்ட்டரில் முதன்மை வணிகப் பிரிவு கிளார்க் டேனிஷ்குமார், பணியில் இருந்தார். அவரிடம், பயணிகள் சிலர், பிளாட்பாரம் 2 ல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும், அவர் இறந்து விட்டதாகவும் கூறினர்.

இது தொடர்பாக ரயில்வே போலீஸ் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தோம். கொலை செய்யப்பட்ட பெண், கறுப்பு நிற லெக்கின்ஸ்சும், பச்சை மற்றும் பிங்க் நிற மேலாடையும் அணிந்துள்ளார். அவரது வலது பக்க காதில் ஆழமான வெட்டுக்காயம் உள்ளது. அவரை கொலை செய்தது யார் என்று தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பேரில் இ.த.ச., 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'

எழும்பூர் ரயில்வே போலீசிடமிருந்து இந்த வழக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் தற்போது கொலை வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

- எஸ்.மகேஷ்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ