Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டம் தொடரும்..! வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தாலும் போராட்டம் தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வழக்கறிஞர்கள் சட்டத்தில் உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைகள் மூடப்பட்டன. பொதுமக்கள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர். இதில் 5 பேர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை. முன்னதாக 126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், புதிய சட்டத்திருத்ததை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கறிஞர் காசிராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, நீதிபதிக்கு எதிராக கை நீட்டி, உரத்த குரலில், நீதிபதியை மிரட்டும் விதமாக வழக்கறிஞர்கள் வாதம் செய்யக்கூடாது. அவ்வாறு வாதம் செய்யும் வழக்கறிஞர்களை, வழக்கறிஞர் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்குள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால், வழக்கு விசாரணையின்போது நீதிபதிகளும், வழக்கறிஞர்கள் எவ்வாறு நடந்துகொள்கின்றனர்? என்பதை உறுதி செய்ய முடியும்’ என்று கூறியிருந்தார்.

மேலும், அந்த வழக்கின் இடைக்கால மனுவில், ‘அனைத்து நீதிமன்றங்களிலும் கேமரா பொருத்தும் வரை, வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த விதிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் தலைமையிலான அமர்வு, புதிய சட்ட திருத்த விதிகளின் மீது வழக்கறிஞர்களுக்கு ஒரு விதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த புதிய விதிகளை மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவு எடுக்கும் வரை, இந்த புதிய விதிகளின் அடிப்படையில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று நாங்கள் ஏற்கனவே பல முறை அறிவித்துவிட்டோம். இதற்கு என்ன அர்த்தம்? அந்த புதிய விதியை செயல்படுத்தாமல், நிறுத்திவைப்பதாகத்தானே அர்த்தம். அதை வழக்கறிஞர்கள் புரிந்துகொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். புதிய விதிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் நோக்கம் வேறு விதமாக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் தலைவர்கள் இந்த போராட்டத்தை நடத்தவில்லை. மூன்றாம் நபர்கள் எல்லாம் தலைமை தாங்கி போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்த புதிய சட்டவிதிகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட குழுவும் இதே முடிவினை கடந்த 22ம் தேதி எடுத்துள்ளது. இந்த முடிவினை விளக்கமாக கடந்த 23ம் தேதி பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் கொடுக்கப்பட்டது. எனவே, புதிய சட்டத் திருத்த விதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நீதிமன்றம் புறக்கணிப்பு மற்றும் போராட்டம் தொடர்வது எனது முடிவு செய்யப்பட்டது. மேலும், 126 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close