Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம்!

சென்னை: இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகள் எதிர்ப்பு, வாராக்கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 12 மற்றும் 13-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.

இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததால்,  போராட்டம் அப்போது தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்தது. இதற்கிடையே, இன்று 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன், வங்கி ஊழியர் சங்க பிரநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று ஒருநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும், ஐக்கிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் அமைப்பாளர் டி.தாமஸ் பிரான்கோ அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

மேலும், தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ள  அவர், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close