Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மஞ்சள் நிறத்தில் மின்னும் எல்.ஐ.சி!

சென்னையின் அடையாளங்களில் ஒண்ணு எல்.ஐ.சி கட்டடம். அந்த  எல்.ஐ.சி. கட்டடத்தின் அடையாளம் நீல வண்ணம். ஆனா தற்பொழுது அதன் தோற்றம்,  பளிச்சென்று இளம் மஞ்சள் வண்ணத்துக்கு  மாறி  மின்னுகிறது.

இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று விசாரிக்கையில், '' எல்ஐசி-யின் 60 ம் ஆண்டு கொண்டாட்டம், வரும் செப்டம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு இந்தியாவில் உள்ள அனைத்து எல்.ஐ.சி. கட்டடங்களுக்கும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார், எல்.ஐ.சியின்  மண்டல அதிகாரி என்.பிரபாகர ராவ்.

மஞ்சள் வண்ணம் பூசப்படுவதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, ''ஒரே மாதிரியான வண்ணத்தை பார்ப்பது  மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்திவிடும். அதனாலதான் இந்த மாற்றம்" என்றார்.

எல்.ஐ.சி கட்டடம் வெறும் அலுவலகம் என்பதையும் தாண்டி, சென்னையின் அடையாளம் என்பதால், அதில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றமுமே சென்னை மக்களின் கவனத்தை ஈர்க்க தவறாது.

- அ.முகமது யூசுப்
படங்கள்: அ.சரண்குமார்
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close