Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றிகரமாக செயல்படும் மதுரை போலீஸ் ஆப்ஸ்!

மீபகாலமாக மதுரையில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை, செயின்பறிப்பு, பெண்கள் மீதான பாலியல்  வன்கொடுமை சம்பவங்களால் மதுரை மாநகர மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாதிக்கப்படும் பெண்கள், கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் சமூக ஒழுக்கத்துக்கு அஞ்சி, போலீஸிடம் புகார் செய்ய துணிவதில்லை.

எந்த பிரச்னையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவ காத்திருக்கிறது, மதுரை மாநகர காவல்துறை. குறிப்பாக பெண்களுக்கு.

உங்களை யாராவது பின் தொடர்கிறார்களா, கிண்டல் செய்கிறார்களா? பாலியல் சீண்டல் செய்கிறார்களா? திருட வருகிறார்களா? உடனே உங்கள் செல்போனில் தரவிறக்கம் செய்து வைத்திருக்கும் ‘மதுரை சிட்டி போலீஸ் ஆப்ஸ்’ ஸை டச் பண்ணினால் போதும். ஐந்து நிமிடத்தில் போலீஸ் படை அங்கு வந்து  பாதுகாப்பு கொடுக்கும். சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பும்.

ஆபத்தில் போலீஸை அழைக்க மதுரை பெண்களுக்கு  கடந்த வருடம் புதிய 'ஆப்லைன்' ஆப்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அறிமுகப்படுத்தினாலும் மக்களிடம் பெரிய அளவில் சென்று சேரவில்லை என்பதால், தற்போது இந்த 'ஆப்’ஸை பள்ளி, கல்லூரி, தன்னார்வ அமைப்புகளின் கூட்டங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது போலீஸ்.

மதுரையில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தை, மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

மதுரை காவல்துறைக்கு இந்த ஆப்ஸை உருவாக்கி கொடுத்த தினேஷ் பாண்டியனிடம் எப்படி பயன்படுத்துவது என்று கேட்டோம்.

‘‘முதலில் உங்களது ஆன்ராய்டு போனில், Madurai City Police  என்கிற ஆப்ஸை பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நம்முடைய பெயர், மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், அவசர உதவி கைபேசி எண் முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து தொடுதிரையில் sos என்கிற இணைப்பை அழுத்தவும். அதற்கு முன்னர் உங்கள் கைபேசியில் location on ஆகி உள்ளதா என்பதை நன்கு கவனிக்க வேண்டும். location off ஆகி இருந்தால் இந்த sos இணைப்பு செயல்படாது. sos இணைப்பை அழுத்திய இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்குள் crime prevention cell என்கிற அமைப்பில் இருந்து உங்கள் எண்ணிற்கு அழைப்பு வந்துவிடும். அதன் மூலம் நமது பிரச்னையை தெரிவிக்கலாம்.

ஒருவேளை தொடர்ந்து அவர்களுடைய அழைப்பு எடுக்கப்படவில்லை என்றால், நமது location ஐ வைத்து அந்த ஏரியாவில் உள்ள போலீஸ் அதிகாரிகள் நம்மை நேரில் அணுகுவார்கள். Data Connection off ஆகி இருந்தாலும் கூட sos இணைப்பு குறுஞ்செய்தியாக செல்லும். இந்த crime prevention cell நேரடியாக மாநகர காவல்துறை ஆணையரின் கண்காணிப்பில் செயல்படுவதால், நம்முடைய புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்த செயலியில் நம்முடைய தரவுகள் ரகசியமாக பாதுகாக்கப்படும். இதே செயலி 2014ல் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, 1350 பயன்பாட்டாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர்.

இதன் server மும்பையில் இருந்தது. தற்போது இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி தொடங்கிய 30 நாட்களிலேயே 2350 பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த செயலியின் சர்வர் (server) மதுரையில்தான் உள்ளது. இந்த ஆப்பை உருவாக்க எனக்கு உதவியாக செந்தில்குமார், வைஷ்ணவி, ஆண்டாள் உதவியாக இருந்தனர்’’ என்றார்.

மதுரையில் மட்டுமே செயல்படும் இந்த செயலியைப் போல் அனைத்து மாநகராட்சியிலும், நகராட்சியிலும் உருவாக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். இன்றே இந்த செயலியை பதிவிறக்கம் செய்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவோம்.

- வெ.வித்யா காயத்ரி

(மாணவப் பத்திரிகையாளர்)
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ