Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விகடனின் வீடியோ சவால்... அசத்திய மாணவப் பத்திரிகையாளர்கள்! #In48Hours #VikatanStudentScheme2016

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் பயிற்சி முகாம் என்பது விகடனில் ஒரு திருவிழா. பல துறைகளில் முத்திரை பதிக்கவிருக்கும் எதிர்கால ஆளுமைகளுக்கு முதல் பெரும் அங்கீகாரம் அளிக்கும் நிகழ்வு அது. விகடன் மாணவப் பத்திரிகையாளர் முகாமுக்கு இது 25-வது பதிப்பு. ஒவ்வொரு வருடமும் இதழியல் துறை கோரும் புதுப்புது திறமைகளை, அசாத்திய தகுதிகளை பயிற்சிகளில் புகுத்தி வரும் விகடன். அந்த வகையில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாணவர்களுக்கு வீடியோ பயிற்சியும் அளிக்கப்பட்டது.

பயிற்சி என்பதைவிட, மாணவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொணரும் வகையில் களம் அமைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெற்ற முகாமில், முதல் நாள் மாணவர்களுக்கு ஒரு சவால் அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற 73 மாணவர்களும் 15 குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். ஒவ்வொரு குழுவும் ஒரு மினி குறும்படம் உருவாக்க வேண்டும். அதிகபட்சம் 2 நிமிடங்களுக்குள் அந்தப் படம் இருக்க வேண்டும். படத்துக்கான கதைக்கரு, திரைக்கதை, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, நடிப்பு, இயக்கம்... இவற்றை அந்த மாணவர்களே தங்களுக்குள் பிரித்து பொறுப்பெடுத்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமான நிபந்தனை... இவை அனைத்தையும் அவர்கள் தங்களிடமிருக்கும் ‘அலைபேசி’யிலேயே மேற்கொள்ள வேண்டும். அதாவது ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிச்சேர்கை என அனைத்தும் அலைபேசியிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான சில மென்பொருட்களை மட்டும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

நிபந்தனைகள் சொல்லி, குழுவாகப் பிரித்த பின்... மினி குறும்படத்தை சமர்பிக்க அவர்களுக்கு நாம் வழங்கிய நேரம்... 48 மணி நேரங்கள். அதில் பல மணி நேரங்கள் பிற பயிற்சி மற்றும் விருந்தினர் உரைகளில் செலவாகிவிட்டது. எஞ்சியிருந்த நேரம்... உறங்குவதற்கான இரவுப் பொழுது மட்டுமே. அது எப்படி கணக்கிட்டாலும் 6 மணி நேரங்களைத் தாண்டாது. அந்த சில மணி நேரங்களுக்குள் மாணவர்கள் உருவாக்கிய குறும்படங்கள்... அசத்தல்!

    உள்ளங்கையில் அடங்கும் அலைபேசியில் அவர்கள் உருவாக்கிய அந்தப் படைப்புகள்... நாளை உலகின் கவனம் ஈர்க்கும் அவர்களுடைய சாதனைகளுக்கான அச்சாரமாக இருந்தது. மாணவர் குழுக்கள் தயாரித்த குறும்படங்களில் அதிகபட்ச பார்வையாளர்களின் பாராட்டுதல்களைக் குவித்த முதல் 3 படங்கள் இங்கே.
 
(இந்தப் படங்கள் அனைத்தும் அலைபேசியில் உருவானவை. மிகக் குறுகிய காலத்தில் ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, ஒலிச்சேர்க்கை அனைத்தும் அலைபேசியிலேயே மேற்கொள்ளப்பட்ட படங்கள் என்பதை மனதில் பதித்துக் கொண்டு இந்தப் படங்களைப் பார்க்க வேண்டுகிறோம்!)

#1 - CUT ALL

 

#2 - தலையெழுத்து

 

#3 - பெருசா ஒன்னுல‌

 

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ