Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெப்பச்சலனம்: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வெப்பச்சலனம் உருவாகி உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழைபெய்து வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, கரூர், ஈரோடு, திருச்சி, தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் மேகமூட்டம்  காணப்பட்டாலும், போதிய அளவு மழை பெய்யவில்லை.

இந்நிலையில், வடமாவட்டப் பகுதிகளில் தற்போது வெப்பச்சலனம் உருவாகி உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும், "சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பகலில் ஆங்காங்கே மழை தூறல்கள் விழும். இரவில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ