Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துப்பாக்கி முனையில் ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 3 பேர் சுற்றிவளைப்பு!

துரை உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்குக் கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பிரபல ரவுடி, ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் மூன்று பேரை சென்னை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமார். இவர் கடந்த 27 ம் தேதி சென்னை, அண்ணாநகர் காவல் நிலையத்தில், புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை சென்னை தனிப்படை போலீஸ் விசாரித்தது. விசாரணையில் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகளான நெல்லையைச்  சேர்ந்த பிரவீன், ராஜபாளையத்தைச்  சேர்ந்த சண்முகசுந்தரம், தூத்துக்குடியைச்  சேர்ந்த அந்தோணி ஆகிய மூவரை போலீஸார், துப்பாக்கி முனையில் நேற்று நெல்லையில் சுற்றி வளைத்தனர். பின்னர், அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து, நாட்டு துப்பாக்கிகள், பட்டா கத்தி, அரிவாள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளி ராக்கெட் ராஜா. இவர் பிரபல ரவுடி. இவருக்கும் வழக்கறிஞர் ராஜ்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் ராஜ்குமாரைக் கொலை செய்ய இந்த கும்பல் முயற்சி செய்துள்ளது. இதனால் மதுரையிலிருந்த ராஜ்குமார், சென்னையில் பதுங்கியிருந்தார். அந்த இடத்தையும் கண்டறிந்த கும்பல், அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து நெல்லைக்கு திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரில், ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் மூன்று பேரை பிடித்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் கொலை முயற்சிக்கான காரணம் தெரியவரும்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ