Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரசாதம் சாப்பிட்டு வாந்தி, மயக்கம்! - சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

துரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வெள்ளிமலைப்பட்டி கிராமத்தில், வண்ணாம்பாறை கருப்புச்சாமி ஆண்டிச்சாமி கோயிலில், மாவிளக்கு பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. கோயிலில், ஆடி மாதம் மழை வேண்டி சாமி கும்பிட்டு, மாவிளக்கு எடுத்து பிரசாதம் வழங்குவது, வழக்கம்.

இந்தாண்டும் மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டும், என்பதற்காக கிராம பொதுமக்களிடம் நெற்பயிர்களும், அரிசியும், காணிக்கையாக பெற்று அதனை பதப்படுத்தி மாவிளக்கு பிரசாதமாக கோயிலில் வழங்கப்பட்டுள்ளது. இதனை  'கெட்டுப்போகாது' என்று பொதுமக்கள் அனைவரும் இரண்டு நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிட்டுள்ளனர்.

மேலும் பள்ளிக்குழந்தைகள் அதனை தின்பண்டங்கள் போல பள்ளிக்கு எடுத்துச் சென்று உண்டுள்ளனர். பக்கத்து கிராமமான புலிப்பட்டியில்  சென்று படிக்கும் 15 மாணவர்கள், பள்ளியிலேயே மயங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர், மாணவர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும், அதனைத் தொடர்ந்து, வெள்ளிமலைப்பட்டி கிராமத்தில் 50க்கு மேற்பட்டோர், இதேபோல் பாதிப்படைந்து அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் அமைச்சர்களும் பார்வையிட்டு சென்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று பாதிப்படைந்த கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை சுமார் 150க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அக்கிராமத்தைச் சேர்ந்த வேல் முருகு என்ற பெண் கூறுகையில்,''எனது மூன்று குழந்தைகளும் மாவிளக்கு சாப்பிட்டு தற்போது, 3 தினங்களாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனது கணவரும், வெளிநாடு சென்று மூன்று நாட்கள் ஆகிவிட்டது. கத்தார் சென்ற அவருக்கும் அங்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளதாக போனில் என்னிடம் தெரிவித்தார்'' என்று கண்ணீர் வடித்தார் .

பாதிப்படைந்த கிராமத்தில் மாவிளக்கு சாப்பிட்டுத்தான் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா இல்லை, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் காரணமா ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

- சே.சின்னதுரை

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ