Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சசிபெருமாளின் கனவு இன்னும் முழுமை பெறவில்லை!' -போராட்டத்தைத் தொடரும் விவேக்

மதுவிலக்குப் போராளி சசிபெருமாள் மறைந்து ஓராண்டு முடிந்துவிட்டன. ' மதுக்கடைகளை மூடியதால் எந்தப் பயனும் இல்லை. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சந்துக் கடைகள் முளைத்துவிட்டன' என வேதனைப்படுகிறார் சசிபெருமாளின் மகன் விவேக்.

மார்த்தாண்டத்தில் உள்ள உண்ணாமலை மதுக்கடையை மூடும் போராட்டத்தில் உயிரிழந்தார் காந்தியவாதி சசிபெருமாள். அவரது மரணத்திற்குப் பிறகே மதுவிலக்கு முழக்கம் தீவிரமடைந்தது. தி.மு.க, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க, பாஜ.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், மதுவிலக்கை ஒரு முக்கிய அம்சமாக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்தன. ஆளும் அ.தி.மு.கவும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தது. ஆட்சியில் அமர்ந்த முதல் நாளிலேயே 500 கடைகளை மூடும் உத்தரவில் கையெழுத்திட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதன்பிறகு, மதுக்கடைகளின் நேரத்தைக் குறைத்தும் உத்தரவிட்டார். ' சசிபெருமாளின் போராட்டம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாகவே, முதல்வர் இவ்வாறு முடிவெடுத்தார்' என மனித உரிமை ஆர்வலர்கள் பேசி வந்தனர்.

நாளை சேலம் இளம்பிள்ளையில் உள்ள சசிபெருமாளின் வீட்டில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நடக்க இருக்கிறது. காந்திய உணர்வாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய விவேக், " இந்த ஓராண்டுக்குள் எவ்வளவோ சம்பவங்கள் நடந்துவிட்டன. 'நான் நிதி மோசடி செய்ததாக' என் தாயாரையே எனக்கு எதிராகத்  தூண்டிவிட்டு புகார் கொடுத்தனர். இப்போது அவர் எங்களுடன்தான் இருக்கிறார். ' எழுதப் படிக்கத் தெரியாத என்னை சிலர் திசைதிருப்பிவிட்டனர்' என வேதனைப்பட்டார் அவர். இப்போது நிலைமை சீரடைந்துவிட்டது. 'பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என்றுதான் என்னுடைய தந்தை போராடினார். 500 கடைகள் மூடப்பட்டதில் சிறிய அளவில் மட்டுமே மகிழ்ச்சியடைகிறோம்.

சேலம் கே.கே நகர் மதுபானக் கடையை மூடும் போராட்டத்தில் வெற்றி கண்டார் என் அப்பா. ஆனால், அந்தக் கடையின் அருகிலேயே 6 சந்துக் கடைகள் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்கின்றன. காவல்துறையும் இதைக் கண்டு கொள்வதில்லை. இப்படியொரு விற்பனையை அவர்களும் ஊக்குவிக்கின்றனர். மது விற்பனை நேரத்தை 2 மணி நேரத்தை அரசு குறைத்தது. இதற்காகவே காத்திருந்தது போல, 24 மணி நேரம் இயங்கக் கூடிய அளவில் சந்துக் கடைகளைத் திறந்துவிட்டார்கள். இதனால் முன்பைவிட வியாபாரம் அதிகப்படியாக நடக்கிறது. மதுபானக் கடைகளை குறைப்பதைவிடவும், மதுபான ஆலைகளின் உற்பத்தியை நிறுத்தினால்தான் முழுமையான மதுவிலக்கு என்பது செயல்பாட்டுக்கு வரும். அதனை நோக்கியே அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இளைய தலைமுறையின் வாழ்வை சீரழிக்கும் மதுபானக் கடைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். இதுதொடர்பாக அப்பாவின் நினைவுநாளில்  சபதமேற்க இருக்கிறோம்" என்றார் நிதானமாக.

-ஆ.விஜயானந்த்

படம்:விஜயகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close