Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி: ஜெ. உத்தரவு!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 23 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" சென்னை பாதுகாப்பு பிரிவு குற்ற புலனாய்வுத் துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த சரவணன், ஆம்பூர் தாலுகாவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்த மனோகரன், பாகசாலை காவல் நிலையத்தில் பணி புரிந்த நாகராஜன், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்த கிருஷ்ணமூர்த்தி.

சென்னை, குமரன் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த சிவபெருமான், பெருந்துறை காவல் நிலையத்தில் பணி புரிந்த சரவணன், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணி புரிந்த தாமஸ் தர்மராஜ், குருவிகுளம் காவல் நிலையத்தில் பணி புரிந்த சங்கரபாண்டின்,

எழும்பூர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்தசொர்ணசுந்தரம், மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் பணி புரிந்த ராஜமாணிக்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

மதுரை தெப்பக்குளம் போக்குவரத்துப் பிரிவில் பணி புரிந்த சுப்பையா, தேனி மாவட்ட ஆயுதப் படை வாகனப் பிரிவில் பணி புரிந்த ராஜேஸ்வரன், உசிலம்பட்டி தலைமைக் காவலராகப் பணி புரிந்த ஜெயபாண்டி, நம்பியூர் காவல் நிலையத்தில் பணி புரிந்த பிரகாசம்.

வேலூர் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்த மூர்த்தி, சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை 12-ம் அணியில் பணி புரிந்த நவீன்குமார் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

மதுரை திருநகர் தலைமைக் காவலராகப் பணி புரிந்த மதுரைச்சாமி கண்மாயில் குளிக்கச் சென்ற போது தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மணி முத்தாறு, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12ம் அணியில் பயிற்சி பெற்று வந்த சந்தோஷ்குமார் மணி முத்தாற்றில் குளிக்கும் போது மயங்கி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குரோம்பேட்டைப் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணி புரிந்த உதயகுமார், தருமபுரி பொம்மிடி பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கம்பியாளராகப் பணி புரிந்த கோவிந்தராஜ், திருவண்ணாமலை கொடநகர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் துங்கபுரம் பிரிவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மஸ்தூராகப் பணிபுரிந்த இமயவரம்பன் மின்கம்பத்தில் ஏறி மின்தடையினை சரி செய்யும் பணியினை மேற்கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 23 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்." என்று கூறப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ