Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் நினைவு தினம்:அஞ்சலி செலுத்தினார் அழகிரி

விருதுநகர்: மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் தங்கப் பாண்டியனின் நினைவு தினத்தையொட்டி அவரின் சமாதியில் மு.க.அழகிரி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று. அவரது சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகேயுள்ள மல்லாங்கிணற்றில் அவரது சமாதி இருக்கிறது. தங்கப்பாண்டியனின் மகனும் முன்னாள் அமைச்சருமான தங்கம்தென்னரசு கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அப்போது தங்கப்பாண்டியனின் நினைவு தினத்தன்று மு.க.அழகிரி தலைமையில் தங்கம் தென்னரசு உள்பட திமுக பிரமுகர்கள் ஊர்வலமாக சென்று சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

திமுக தலைமை மு.க.அழகிரியை ஒரங்கட்டிய பிறகு அவரது ஆதரவாளராக இருந்த தங்கம்தென்னரசு மு.க.ஸ்டாலின் ஆதரவாளராக மாறினார். தங்கப்பாண்டியன் நினைவு தினத்தன்று, தனது ஆரம்ப கால நண்பர் என்பதால் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் வந்து தங்கப்பாண்டியனின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகிறார். அவர் வரும் போது திமுகவை சேர்ந்த தங்கம்தென்னரசு, முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் , உள்ளிட்ட லோக்கல் திமுகவினர் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.

பிறகு திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் தலைமையில் தங்கம்தென்னரசு உட்பட திமுகவினர் தனியாக ஊர்வலம் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இன்றைக்கு தங்கப்பாண்டியனின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மு.க.அழகிரி காலை 7.30 மணிக்கு தனது ஆதரவாளர்களான முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்சா, இசக்கி முத்து ஆகியோருடன் காரில் வந்து தங்கப்பாண்டியனின் சமாதியில் மலர் வளையம் வைத்து விட்டு உடனே புறப்பட்டு சென்றார்.

தங்கப்பாண்டியனின் மருமகனும் தமிழச்சி தங்கப்பாண்டியனின் கணவருமான ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திரசேகரன் சமாதியின் நுழைவு வாயிலில் நின்று அழகிரியை வரவேற்றார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. சமாதிக்குச்  சென்று விட்டு உடனே காரில் ஏறி புறப்பட தயாரானார். அப்போது ஐ.பி.எஸ்., அதிகாரி சந்திரசேகரன் பேச முயன்றார். உடனே பெயரளவில் தலையை ஆட்டி விட்டு தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரைக்கு கிளம்பி சென்று விட்டார்.

பிறகு இன்று(ஞாயிறு) காலை 9 மணிக்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தலைமையில் முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு, விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஊர்வலமாகச்  சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

எம்.கார்த்தி.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ