Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மருத்துவ முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டீ, டிபன், போக்குவரத்துக்கு ரூ.20!'

விருதுநகர்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் நடத்தப்படும் மருத்துவ முகாம்களில் பங்கேற்கும் மாணவர்களுக்கு டீ, டிபன், போக்குவரத்து செலவுக்கு 20 ரூபாய் வழங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் 6 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு என்று தனியாக மருத்துவ முகாம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கான இந்த மருத்துவ முகாமில், எலும்பு முறிவு, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் கலந்து கொள்வார்கள்.

மாணவர்களின் உடலை பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழு, மாணவர்களுக்குக் கை மற்றும் காலில் ஊனம் இருந்தாலோ, காது கேட்காத பிரச்னை இருந்தாலோ அதற்கான மருத்துவ உபகரணங்கள் இந்த முகாமில் வழங்கப்படும். உடலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாணவர்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ரேஷன் கார்டு, வருமானச் சான்றிதழோடு வரவேண்டும்.

இது தொடர்பாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்குனர் டாக்டர் அறிவொளியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தும்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ முகாமில் பங்கேற்கும் உடல் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

மேலும், மருத்துவ முகாமில் பங்கேற்கும் மாணவர்களுக்குக் காலை டிபன் மற்றும் டீ, காப்பி போன்றவைகளும் போக்குவரத்துச் செலவுக்கு ஒரு மாணவனுக்கு 20 ரூபாய் வழங்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காகக் கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது" என்றார்.

- எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ