Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் புகார்!

டெல்லி விமான நிலையத்தில் திமுக., எம்.பி. திருச்சி சிவாவை, அதிமுக., எம்.பி. சசிகலா புஷ்பா தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு  மாநிலங்களவையில்  பேசிய  சசிகலா புஷ்பா, “எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.  எனது பதவியை ராஜினாமா செய்யும்படி எனது கட்சித் தலைமையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். என்னை  எனது தலைவர் அறைந்தார்” என பேசியது அரசியல் அரங்கில் இன்னும் பரபரப்பை கூட்டியது.

இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம், தமிழக  அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி., முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு கிளப்புவதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,  பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த  பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்  கிருஷ்ணமூர்த்தி, பாண்டியன்  உள்ளிட்ட  வழக்கறிஞர்கள் இன்று திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனனை சந்தித்து மனுக்கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பாண்டியன்,  “தன்னை முதல்வர் தாக்கியதாக நாடாளுமன்றத்தில் போய் பேசியிருக்கிறார் சசிகலா. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார். முதல்வர் தன்னை தாக்கியதாகவும்,  ராஜினாமா  செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் வாய்மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை.

இப்படி ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதற்காக சசிகலா புஷ்பா மீது  வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார்  கொடுத்துள்ளோம்.  சட்ட நடவடிக்கைகள் எடுக்க 20 நாட்கள் காத்திருப்போம்,  இல்லையெனில் அவர் மீது நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடருவோம் என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ