Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா, கருணாநிதி என பெயரை சொல்லி அழைப்பதில் தவறு இல்லை... தேமுதிக பார்த்தசாரதி!


டந்த 2013ம் ஆண்டு பாபநாசத்தில், நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அதிமுகவினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,  தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தேமுதிகவின் தலைமை நிலைய செயலாளரும் விருகம்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏவுமான பார்த்தசாரதி நேரில் இன்று(புதன்) ஆஜாரானார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், " வக்கீல்கள் போராட்டம் நடப்பதால், நீதிபதி நேரில் ஆஜாராக சொன்னதால் வந்துள்ளேன். அவதூறு வழக்குகளைப் பல எதிர்க்கட்சிகள் மீது வேண்டுமென்றே அதிமுக அரசு போட்டு வருகிறது. உச்ச நீதி மன்றம் இது போல் அவதூறு வழக்குகள் போடுவது அரசுக்கு வீண் செலவை ஏற்படுத்துகிறது என தன் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

எதிர்க் கட்சிகள் மீது அவதூறு வழக்குகளைப் போடுவதை விட்டு விட்டு மக்கள் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை அதிகமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு சம்பவங்கள் தினம்தோறும் நடைபெற்று வருகின்றன.

இதையெல்லாம் விட்டு விட்டு சட்ட சபையில் அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவை 'ஜெயலலிதா' என பெயரைச் சொல்லி அழைக்க கூடாது என்றும் திமுகவினர் கருணாநிதி பெயரை சொல்லி அழைக்க கூடாது என்றும்  விவாதம் செய்கின்றனர். அவர்களுடைய நிஜ பெயர் அதுதானே. வாக்காளர் அட்டையில் அந்த பெயர்தானே இருக்கிறது. நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மாவையே காந்தி என பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம். ஜவர்கஹலால் நேரு, நரேந்திர மோடி என எல்லாரையும் பெயர் சொல்லித்தான் அழைக்கிறோம்.

சட்டமன்றத்தில் பெயரைச் சொல்லி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. பெயர்களைச் சொல்ல கூட அனுமதிக்கவில்லை என்றால் அது என்ன சட்ட மன்றம். அதிமுகவும் திமுகவும் மக்கள் பிரச்சனைகளைச் சட்டசபையில் கையில் எடுக்காமல், தங்கள் கட்சியின் பிரச்னையை கையில் எடுத்து, இன்றைக்கு நீ பெரியவனா நான் பெரியவனா என்றுதான் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. மக்கள் பிரச்னைகள் குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை என திட்டவட்டமாகக் கூறுகிறேன்" என்றார்.

 கே.குணசீலன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ