Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்விட்டரில் வில்லங்க கருத்து... சர்ச்சையில் கிரண்பேடி!

 

புதுச்சேரி: பழங்குடியின மக்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்திருப்பதாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரண்பேடி, பதவி ஏற்றது முதல் அதிரடியாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக 'தூய்மை இந்தியா' திட்டத்தை புதுச்சேரியில் முழுமையாகக் கொண்டுவர, அவரே வார இறுதி நாட்களில் துப்புரவுப் பணியாளர்களோடு கைகோத்துக் கொண்டு களத்தில் குதிக்கிறார். அதேபோல அன்றாட நிகழ்வுகள், கருத்துகள் போன்றவற்றை அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். ஏராளமானவர்கள் அவரை ட்விட்டரில் பின் தொடர்கிறார்கள்.

சமீபத்தில், " புதுச்சேரியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வர வேண்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”பழங்குடியின முன்னாள் குற்றவாளிகள் மிகவும் கொடூரமானவர்கள். குற்றத் தொழிலில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் எப்போதாவதுதான் தண்டிக்கப்படுகிறார்கள்” என ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருப்பதுடன், இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.


-ஜெ.முருகன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ